Kitchen Tips : எச்சரிக்கை! உங்கள் சமையலறையில் இங்கிருந்துதான் கிருமிகள் வருகிறது!-kitchen tips warning this is where germs come from in your kitchen - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kitchen Tips : எச்சரிக்கை! உங்கள் சமையலறையில் இங்கிருந்துதான் கிருமிகள் வருகிறது!

Kitchen Tips : எச்சரிக்கை! உங்கள் சமையலறையில் இங்கிருந்துதான் கிருமிகள் வருகிறது!

Mar 02, 2024 09:56 AM IST Priyadarshini R
Mar 02, 2024 09:56 AM , IST

  • Kitchen Tips : எச்சரிக்கை! உங்கள் சமையலறையில் இந்த இடங்களில் தான் பாக்டீரியாக்கள் உள்ளது!

சுத்தமான சமையலறையில் தான் நாம், நல்ல மற்றும் சத்துள்ள உணவுகளை சமைக்கமுடியும். எனவே சமையலறையை சுத்தமாக வைத்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும். எதை நாம் தினமும் கழுவவேண்டும். எது நமது ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 11)

சமையலறையில் பாக்டீரியாக்கள் அதிகம் உருவாகும் இடம் இந்த ஸ்பான்ஞ்கள்தான். இதில் இ.கோலி, சால்மோனில்லா பாக்டீரியாக்கள் உருவாகின்றன. எனவே இவற்றி தினமும் தண்ணீர் மற்றும் பிளீச்சிங் கலந்து ஊறவைப்பது அல்லது அதிக சூட்டில் அவனில் வைப்பது என இந்த கிருமிகளை அழிக்கும் ஒரு விஷயத்தை கட்டாயம் செய்ய வேண்டும்.

(2 / 11)

சமையலறை மேடைகளில் உணவு துணுக்குகள் அதிகம் சிதறிக்கிடக்கும். சிதறும் உணவுகள் நாள்முழுவதும் அங்கே இருக்கும்போது, அதில் இருந்து பாக்டீரியாக்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. எனவே சமையலறை மேஜைகளை கிருமிக்கொல்லிகள் வைத்து அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். உணவு சமைப்பதற்கு முன்னரும், பின்னரும் அவற்றை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அங்கு கிருமிகள் நிறைந்து வழியும்.

(3 / 11)

நாம் சப்பாத்தி செய்வதற்கு கட்டாயம் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள், சப்பாத்தி உருட்டும் கட்டை. ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் இருக்கக்கூடியது. இதை பயன்படுத்தியவுடன் கட்டாயம் கழுவி வைக்க வேண்டும். இது பெரும்பாலும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும் என்பதால், இதில் ஒட்டியிருக்கும் மாவுத்துகள்களில் பாக்டீரியாக்கள் வளரும்.

(4 / 11)

உப்பு மற்றும் மிளகுத்தூள் கொட்டி வைப்பதற்கு நாம் ஃபேன்சி பொருட்களை அழகாக சாப்பாட்டு மேஜையில் வைத்திருப்போம். இதை சாம் சாப்பிடும்போது, சாப்பாட்டை தயாரிக்கும்போதும் பயன்படுத்துவோம். கைகளில் இருந்து இதற்கு பரவக்கூடிய பாக்டீரியாக்கள் அதில் தங்கி வளர துவங்கும். எனவே அவற்றை அவ்வப்போது, துடைத்து அல்லது சூடான சோப்பு தண்ணீரில் கழுவி வைக்க வேண்டும்.

(5 / 11)

மைக்ரோவேவ் அவனில் நாம் சமைக்கும்போது மிகவும் கவனமாக சமைக்க வேண்டும். தொடர்ந்து சமைக்கும்போது அதில் சிந்தும் பொருட்களை நாம் கண்டுகொள்வதில்லை. அது பாக்டீரியாக்கள் வளர்வதற்கு காரணமாகிறது. எனவே அதன் உட்புறத்திலும், வெளிப்புறத்திலும் நன்றாக துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு நல் சோப்பு மற்றும் வினிகரை பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

(6 / 11)

மீண்டும் பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களை நாம் சரியாக கழுவவில்லையென்றால், அதில் பாக்டீரியாக்கள் வளரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே வாட்டர் பாட்டில்களை சூடான கொதிக்கும் சோப் கலந்த தண்ணீரில் கழுவவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும், அதை நன்றாக கழுவ வேண்டியது அவசியம். பின்னர் அவற்றை ஈரமின்றி நன்றாக காய வைக்க வேண்டும். அப்போதுதான் அதில் பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படும்.

(7 / 11)

காய்கறிகள் நறுக்கும் கட்டையில் பாக்டீரியாக்கள் அதிகளவில் வளரும். அதில் நாம் இறைச்சி, பழங்கள் மற்றும் காய்கறிகள் என வெட்டுவதால், அதன் துகள்கள் அதில் இருக்கும்போது அங்கு பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கிறது. அவற்றை கொதிக்கும் தண்ணீர் ஊற்றி கழுவவேண்டும். சோப்பு போட்டு நன்றாக தேய்க்க வேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் அதை கழுவிவிடுவது நல்லது.

(8 / 11)

சமையலறை சிங்கில் அதிகளவில் பாக்டீரியாக்கள் வளரும். அதை வழக்கமாக சுத்தம் செய்யாவிட்டால், அதில் அதிகளவில் பாக்டீரியாக்க வளரும். எனவே கிருமிக்கொல்லிகள் வைத்து சிங்க்கை சுத்தம் செய்ய வேண்டும். அதில் வினிகர், தண்ணீர் கலந்து தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

(9 / 11)

பாத்திரங்களை துடைக்கும் துணிகளில் அதிகளவில் பாக்டீரியாக்கள் வளரும். அதில் ஒட்டியிருக்கும் உணவுத்துகள் மற்றும் ஈரப்பதம் ஆகியவை அதற்கு காரணமாகும். எனவே அவற்றை அடிக்கடி துவைக்க வேண்டும். நல்ல சோப்பு மற்றும் சூடான தண்ணீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும். மேலும் அடிக்கடி அவற்றை மாற்ற வேண்டும்.

(10 / 11)

(11 / 11)

மற்ற கேலரிக்கள்