தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thalapathy Vijay: வெளியானது கோட் 2 - சிங்கிள்..விஜய் உடன் இணைந்து பாடிய பவதாரணி! - வாய்ஸ் எப்படி இருக்கு?- வீடியோ!

Thalapathy Vijay: வெளியானது கோட் 2 - சிங்கிள்..விஜய் உடன் இணைந்து பாடிய பவதாரணி! - வாய்ஸ் எப்படி இருக்கு?- வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 22, 2024 06:21 PM IST

Thalapathy Vijay: விஜய் மற்றும் சினேகாவின் காம்போவில் உருவாகி இருக்கும் இந்தப்பாடலுக்கு கபிலன் வைரத்து வரிகள் எழுதி இருக்கிறார். இந்தப்பாடலை நடிகர் விஜயும், மறைந்த பாடகியும், யுவன் ஷங்கர் ராஜாவின் தங்கையுமான பவதாரணி பாடியிருக்கிறார்கள். - வாய்ஸ் எப்படி இருக்கு?

Thalapathy Vijay: வெளியானது கோட் 2 - சிங்கிள்..விஜய் உடன் இணைந்து பாடிய பவதாரணி! - வாய்ஸ் எப்படி இருக்கு?- வீடியோ!
Thalapathy Vijay: வெளியானது கோட் 2 - சிங்கிள்..விஜய் உடன் இணைந்து பாடிய பவதாரணி! - வாய்ஸ் எப்படி இருக்கு?- வீடியோ!

Thalapathy Vijay: நடிகர் விஜயின் நடிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், உருவாகி வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் இருந்து, இரண்டாவது சிங்கிளான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் வெளியாகி இருக்கிறது. 

விஜய் மற்றும் சினேகாவின் காம்போவில் உருவாகி இருக்கும் இந்தப்பாடலுக்கு கபிலன் வைரத்து வரிகள் எழுதி இருக்கிறார். இந்தப்பாடலை நடிகர் விஜயும், மறைந்த பாடகியும், யுவன் ஷங்கர் ராஜாவின் தங்கையுமான பவதாரணி பாடியிருக்கிறார்கள். 

இதில், பவதாரணியின் குரல் செயற்கை நுண்ணறிவு டெக்னாலாஜி மூலமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். முன்னதாக கோட் படத்தில் இருந்து தமிழ் புத்தாண்டு பரிசாக, விசில் போடு பாடல் வெளியானது. இந்தப்பாடல் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றது. பலரும் இது பழைய யுவன், மெட்டு அமைத்த பாடல் போல இல்லை என்று கமெண்டுகளை பதிவிட்டனர். 

ட்ரெண்டிங் செய்திகள்

முன்னதாக, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி நடித்துவருகிறார். தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் சென்னை மட்டுமல்லாது, தாய்லாந்து, ஹைதராபாத், இலங்கை, புதுச்சேரி, திருவனந்தபுரம், ரஷ்யா ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் நடிகர் விஜய், இந்த திரைப்படத்தில், இரண்டு வேடங்களில் நடித்திருப்பதாகவும் தெரிகிறது. முன்பே, நடிகர் விஜய், அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி, மெர்சல்,பிகில், லியோ ஆகியப் படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் தற்போதும் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார் 

பல வருடங்களுக்கு பிறகு இணைந்த யுவன்

இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா முதன்முறையாக இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகும் வகையில் தயார் ஆகி வருகிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்கிறார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியுள்ளனர். இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.

பொதுவாகவே விஜய் படத்தில் நடனம் பட்டையைக் கிளப்பும். இப்படத்திலும் நடனத்திற்கு வலுவாக இடம்தரும் ராஜூ சுந்தரம், சேகர் மற்றும் சதீஷ் ஆகியோர் சேர்ந்து பாடல்களுக்கு நடன அமைப்பினை செய்துள்ளனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: