தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Dental Care Tips : மஞ்சள் பற்களை வெள்ளையாக்க வேண்டுமா? வாய் துர்நாற்றத்தை 5 நாளில் போக்கலாம்!

Dental Care Tips : மஞ்சள் பற்களை வெள்ளையாக்க வேண்டுமா? வாய் துர்நாற்றத்தை 5 நாளில் போக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Jun 18, 2024 11:48 AM IST

Dental Care Tips : மஞ்சள் பற்களை வெள்ளையாக்க வேண்டுமா? கிராம்பை வைத்து ஒரு எளிய டிப்ஸ். வாய் துர்நாற்றத்தையும் அது ஐந்தே நாளில் போக்கும்.

Dental Care Tips : மஞ்சள் பற்களை வெள்ளையாக்க வேண்டுமா? வாய் துர்நாற்றத்தை 5 நாளில் போக்கலாம்!
Dental Care Tips : மஞ்சள் பற்களை வெள்ளையாக்க வேண்டுமா? வாய் துர்நாற்றத்தை 5 நாளில் போக்கலாம்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

வாயில் மஞ்சள் நிற பற்கள் என்னதான் இரண்டு முறை ஃபிரஷ் செய்தாலும் போகாது. வாயில் சிலருக்கு துர்நாற்றம் வீசக்கூடும். சொத்தை பற்களினால் ஏற்படக்கூடிய வலி மற்றும் வீக்கமும் உங்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். முக்கியமாக பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்கக்கூடிய முறையை தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

கிராம்பு – ஒரு ஸ்பூன்

கிராம்பில் வைட்டமின் சி, தயாமின், நயாசின், பாஸ்பரஸ், கால்சியம், ரிபோஃப்ளாவின் உள்ளிட்ட எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. கிராம்பை பயன்படுத்தி பற்களை துலக்கும்போது உங்களுக்கு பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் உடனடியாக நீங்கிவிடும். 

அஜீரணக்கோளாறுகளால் ஏற்படும் வாய்துர்றாற்றத்தைப் போக்கும். சொத்தை பற்களால் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தையும் சரிசெய்யும். நாளடைவில் சொத்தைப்பற்களில் உள்ள கிருமிகளும் அழிந்துவிடும்.

பூண்டு – 1 பல்

பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறையைப் போக்கும்.

இந்துப்பு – கால் ஸ்பூன்

நல்லெண்ணெய் – ஒரு ஸ்பூன்

பேஸ்ட் – சிறிதளவு

வாயில் உள்ள கிருமிகளை அகற்றும். பற்களில் உள்ள மஞ்சள் கறையைப் போக்கும்.

செய்முறை

கிராம்பை மிக்ஸியில் சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். அதில் ஒரு ஸ்பூன் எடுத்துக்கொண்டு, ஒரு பல் பூண்டை துருவி சேர்க்கவேண்டும். பின்னர் இந்துப்பு, நல்லெண்ணெய் சேர்க்கவேண்டும். அதனுடன் பேஸ்டை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும்.

இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேர்த்து 5 நாட்கள் வரை ஃபிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். இதை உடனுக்குடனும் செய்துகொள்ளலாம். ஆனால் வெளியில் வைக்கக்கூடாது. அதன் நிறம், சுவை, மணம் என அனைத்தும் மாறிவிடும். தினமும் இதில் இரண்டு முறை பல் துலக்கவேண்டும்.

ஒரு நிமிடம் வரை மட்டுமே ஃபிரஷ் செய்யவேண்டும். நன்றாக மிதமான சூட்டில் உள்ள தண்ணீரில் வாய் கொப்பளிக்கவேண்டும். சாதாரண பிரச்னைகள் இருந்தால் ஒரு நாளிலே உங்களுக்கு மாற்றம் தெரியும். 

ஆனால் நாள்பட்ட பற்கள் பிரச்னைகள் உள்ளவர்கள் தொடர்ந்து 5 நாட்களுக்கு பயன்படுத்தவேண்டும். நல்ல பலன் கொடுக்கும் டிப்ஸ். கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்