தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Sesame Laddu : ஒரே ஒரு லட்டு! இரும்பு, கால்சியம் அதிகரிக்கும்! சோர்வை நீக்கி சுறுசுறுப்பை கொடுக்கும்!

Sesame Laddu : ஒரே ஒரு லட்டு! இரும்பு, கால்சியம் அதிகரிக்கும்! சோர்வை நீக்கி சுறுசுறுப்பை கொடுக்கும்!

Priyadarshini R HT Tamil
Dec 11, 2023 01:25 PM IST

உடலில் இரும்பு மற்றும் கால்சியம் சத்தை அதிகரிக்கக்கூடிய லட்டு, இதை சாப்பிடும்போது உடல் அசதி மற்றும் சோர்வு போன்றவை இருக்காது. இது உடலுக்கு தேவையான ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Sesame Laddu : ஒரே ஒரு லட்டு! இரும்பு, கால்சியம் அதிகரிக்கும்! சோர்வை நீக்கி சுறுசுறுப்பை கொடுக்கும்!
Sesame Laddu : ஒரே ஒரு லட்டு! இரும்பு, கால்சியம் அதிகரிக்கும்! சோர்வை நீக்கி சுறுசுறுப்பை கொடுக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

முடி உதிராது, முடி நல்ல ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும். முழு உடலையுமே ஆரோக்கியத்துடன் இயங்க வைக்கும் லட்டு என்றே கூறலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிக்க உதவும்.

லட்டு செய்ய தேவையான பொருட்கள், செய்முறை மற்றும் நன்மைகள்

கருப்பு எள் – ஒரு கப்

(இந்த லட்டு செய்ய கருப்பு எள் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எள்ளில் தான் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அந்த காலத்தில் நம் முன்னோர் அதிகம் இந்த எள்ளை பயன்படுத்தி ஆரோக்கியமாக இருந்தனர். கருப்பு எள்ளை சுத்தம் செய்வதற்கு நல்ல நீரில் கலந்து அலசி, வடிகட்ட வேண்டும்)

அடுப்பில் கடாயை வைத்து சூடாக்கி, அதில் வடித்த எள்ளை சேர்த்து வறுக்க வேண்டும். பெரும்பாலும் இரும்பு கடாயை பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் எவர் சில்வர் கடாயை பயன்படுத்துங்கள். ஆனால் நான் ஸ்டிக் கடாய் மட்டும் வேண்டாம்.

அடுப்பை அதிக தீயில் வைத்தால் ஈரத்தன்மை சட்டென்று குறையும். இரும்பு கடாயில் செய்யும்போது இரும்புச்சத்தும் உடலில் சேரும்.

எள்ளு நன்றாக வெடித்து, பொரிந்து வரும் வேளையில் இதை வேறு தட்டில் மாற்றி ஆறவிடவேண்டும்.

பூசணி விதைகள் – கால் கப் (நாட்டு மருந்த கடைகளில் கிடைக்கும்)

இந்த விதைகளையும் நன்றாக வறுக்க வேண்டும். இதையும் வறுபட்டவுடன் வேறு ஒரு தட்டில் மாற்றிவிடவேண்டும்.

கசகசா – கால் கப்

இதையும் கடாயில் சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கசகசாவை நாம் பெரும்பாலும் உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. குருமா போன்றவற்றில் தான் சேர்க்கிறோம். இந்த கசகசா உடலில் செரிமானத்தை தூண்டுகிறது. செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. எனவே நாம் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது அது உடலில் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. மனஅழுத்தத்தை குறைத்து, ஆழ்ந்த உறக்கத்தை தரும். உடல் சோர்வை நீக்கும். அதிகப்படியாக கால்சிய சத்துக்கள் இருக்கும்.

ஆளி விதை – அரை கப் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஃப்ளாக்ஸ் சீட்ஸ் என்று இப்போது பிரபலமாகி வருகிறது.

இதையும் கடாயில் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்துள்ளது. உடலில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை கொண்டது. முடி வளர்ச்சியை தூண்டும். முடி உதிர்வை குறைக்கும். சருமத்தை பளபளப்பாக வைக்க உதவும். மனஅழுத்தத்தை குறைக்க உதவும். தோல் சுருக்கத்தை நீக்கும். இளமையை எப்போதும் தக்க வைக்க உதவும்.

இந்த விதையை சேர்த்தவுடனே அடுப்பை அணைத்துவிடவேண்டும். கடாயின் சூட்டிலே இது வறுபட்டால் போதும். இது சேர்த்தவுடனே வெடித்து வரும். இதை நீண்ட நேரம் வறுக்க வேண்டிய தேவையில்லை.

எல்லா பொருட்களையும் ஆற வைத்து காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து, நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இது கொரகொரப்பாக பதத்துக்குத்தான் வரும்.

இதில் ஒரு கப் வெல்லம் சேர்த்து மீண்டும் அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றிவிடவேண்டும்.

இதில் சிட்டிகை ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து நீங்கள விரும்பிய அளவில் லட்டுகளாக பிடித்து எடுத்துக்கொள்ளலாம். இந்த லட்டை தினமும் சாப்பிட சுவை அள்ளும்.

எண்ணற்ற கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. உடல் அசதி மற்றும் சோர்வு இருக்காது. மந்தமான குழந்தைகளுக்கு இந்த லட்டு கொடுத்து வந்தால் அவர்கள் சுறுசுறுப்பாகிவிடுவார்கள். இதில் உள்ள பூசணி விதைகள் மூளையை சுறுசுறுப்பாக்கும்.

தினமும் ஒரு லட்டு சாப்பிடலாம். வெளியிலேயே 10 நாட்கள் வரை வைத்து கெடாமல் பார்த்துக்கொள்ள முடியும். அவ்வப்போது செய்து சாப்பிடுங்கள். பெண்களுக்கு மாதவிடாயை சீராக்கும் தன்மை இந்த லட்டுக்கு உண்டு.

WhatsApp channel

டாபிக்ஸ்