தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Roadside Kadai Chutney : ரோட்டுக்கடை கடை தண்ணி சட்னி! மதுரை ஸ்பெஷல் – கூடுதலா 2 இட்லி சாப்டுவீங்க!

Roadside Kadai Chutney : ரோட்டுக்கடை கடை தண்ணி சட்னி! மதுரை ஸ்பெஷல் – கூடுதலா 2 இட்லி சாப்டுவீங்க!

Priyadarshini R HT Tamil
Sep 23, 2023 10:30 AM IST

Road Side Kadai Chutney : வழக்கமான சட்னி செய்து போர் அடித்துவிட்டதென்றால், இதுபோல் வித்யாசமான சட்னி செய்யலாம். இது மதுரை ஸ்பெஷல் சட்னி. ரோட்டுக்கடைகளில் அரைக்கப்படும் சட்னி.

Roadside Kadai Chutney : ரோட்டுக்கடை கடை தண்ணி சட்னி! மதுரை ஸ்பெஷல் – கூடுதலா 2 இட்லி சாப்டுவீங்க!
Roadside Kadai Chutney : ரோட்டுக்கடை கடை தண்ணி சட்னி! மதுரை ஸ்பெஷல் – கூடுதலா 2 இட்லி சாப்டுவீங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

எண்ணெய் – தேவையான அளவு

பூண்டு – 2 பல்

இஞ்சி – கால் இன்ச்

வெங்காயம் – 1 (பெரியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 3

பொட்டுக்கடலை – கால் கப்

உப்பு – தேவையான அளவு

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர் அவை ஆறியவுடன், பொட்டுக்கடலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல தண்ணீராக ரோட்டுக்கடையில் இருப்பதுபோல் அரைத்துக்கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். 

தாளித்தவுடன், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் (சிறியது அல்லது பெரியது எது வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு) சேர்க்கவேண்டும். 

தாளிப்பை சட்னியில் சேர்த்துவிட சுவையான ரோட்டுக்கடை தண்ணீர் சட்னி தயார்.

இது பார்ப்பதற்கு தேங்காய் சட்னி போலவே வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால், இது பெரிய வெங்காயத்திலே செய்யப்படும் ஒரு சட்னியாகும்.

இந்த சட்னி சேர்த்து சாப்பிட்டால், கூடுதலாக நிச்சயம் 4 இட்லிகள் சாப்பிட முடியும். சுவை அந்தளவுக்கு இருக்கும்.

வழக்கமான சட்னி உங்களுக்கு போர் அடிக்கும்போது இதுபோன்ற சட்னிகளை செய்து சாப்பிட உங்களுக்கு வித்யாசமான ருசியில் சட்னி கிடைக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்