தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rice Vada : மொறு மொறு வடை அரிசி மாவில் இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்!

Rice Vada : மொறு மொறு வடை அரிசி மாவில் இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Oct 04, 2023 12:15 PM IST

Rice Vada : மொறு மொறு வடை அரிசி மாவில் இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்!

Rice Vada : மொறு மொறு வடை அரிசி மாவில் இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்!
Rice Vada : மொறு மொறு வடை அரிசி மாவில் இன்ஸ்டன்ட்டாக செய்யலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

இஞ்சி – 1 இன்ச்

சீரகம் – 1 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 பொடியாக நறுக்கியது

மிளகு – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயத்தூள் – சிறிதளவு

பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அரிசி மாவு சேர்த்து, அதே கப் அளவு தண்ணீர், அதே கப் அளவு புளிக்காத தயிரும் ஊற்றி, நன்றாக கட்டியில்லாது கலந்துகொள்ள வேண்டும்.

பின் தோல் சீவி நறுக்கிய இஞ்சி, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், மிளகு 1 டீஸ்பூன் சிறிது பெருங்காயத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து இதை கடாயில் ஊற்ற வேண்டும்.

கடாய் சூடானதும் அடுப்பை குறைவாக எரியவிட்டு, மாவு அடிபிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும.

அரிசிமாவு என்பதால் சீக்கிரம் குழையும், விரைவில் அடி பிடிக்கும். எனவே அடிக்கடி கிளறுவது அவசியம். மாவு பால்கோவா போல பதம் வரவேண்டும்.

இதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, மல்லித்தழைகள் கொஞ்சம் போட்டு நன்கு கிளறி அரிசி மாவு திரண்டு சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும் இதை அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும்.

கடாயில் வடைபொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, அடுப்பை மிதமாக எரியவிட்டு கிளறிய வடை மாவை ஓரளவு சூட்டில் கைகளால் நன்கு மென்மையாக ஒருமுறை பிசைந்து விட்டு அதிலிருந்து சிறிதளவு மாவை எடுத்து உருட்டி வடையாகத் தட்டி நடுவில் துளையிட்டு, எண்ணெய்ல் சேர்த்து சீராகப் பொரித்து எடுக்க வேண்டும்.

3 அல்லது 4 வடைகளாக ஒரே நேரத்தில் போட்டு பொரிப்பது சிறந்தது. வடை நல்ல கோல்டன் பிரவுன் நிறத்தில் வந்ததும் எடுத்து எண்ணெய் வடிகட்டியில் சேர்க்க வேண்டும்.

இது வழக்கமான மெதுவடையை விட கிரிஸ்பியாக இருக்கும். ருசியும் தனித்து தெரியும். சட்னி, சாம்பார், சாஸ், போன்ற சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.

நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel