தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship Issues : ரகசியங்கள் உறவில் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன? வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் இழப்பு!

Relationship Issues : ரகசியங்கள் உறவில் ஏற்படுத்தும் சிக்கல்கள் என்ன? வெளிப்படைத்தன்மை இல்லாவிட்டால் இழப்பு!

Priyadarshini R HT Tamil
Aug 12, 2023 11:09 AM IST

Relationship Issues : உங்கள் பார்ட்னரிடம் நீங்கள் சார்ந்த விஷயங்களை சொல்லாமல் விடுவது சிறிய விஷயம்தானே என்று நினைக்காதீர்கள். நீங்கள் தொடர்ந்து மறைத்து ரகசியங்கள் காத்து வந்தீர்கள் என்றால் அந்த உறவு முறிந்துவிடும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

தம்பதிகள் ஏன் ரகசியம் காக்கிறார்கள்

விமர்சனத்துக்கு பயந்து

அடுத்தவர்கள் ஏதேனும் கூறுவார்கள் என்று பயந்து

சங்கடமாக உணர்வது

எரிச்சல் காரணமாக

நேரமின்மை

கடினமான விஷயங்கள் என்பதால் தவிர்ப்பது

அவர்கள் துன்பப்படவேண்டாம் என பாதுகாப்பது

சில விஷயங்களை தங்கள் பார்ட்னருடன் பேசுவதில் சிலருக்கு சங்கடங்களும், அவமான உணர்வும் ஏற்படுகிறது. சில விஷயங்கள் அவர்களை பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட கூடியவராகவும் காட்டும். அவர்கள் திறந்த மனதுடனும், நேர்மையாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் நம்பிக்கையும், நல்ல கலந்துரையாடலும் இருக்கும். மற்ற வேலைகள் மற்றும் தூரத்தில் இருப்பதால், தம்பதிகள் ரகசியங்கள் வைத்துக்கொள்வது எளிது. ரகசியங்கள் காத்தால், உறவை சிதைக்கம். தனிமை உணர்வு, நம்பகமற்ற உணர்வு ஏற்படும்.

ஆரோக்கிய உறவை மேற்கொள்வது எளிதல்ல, ஆனால் அது உடைவதற்கு ரகசியங்கள் காரணமாகின்றன.

நம்பிக்கையிழத்தல்

நம்பிக்கையின்மைக்கு ரகசியங்கள் வழிவகுக்கின்றன. சந்தேகம், பாதுகாப்பின்மை ஆகியவை ஏற்படுகிறது. நம்பிக்கையின்றி, தம்பதிகள் திறந்த மனதுடன் நேர்மையாக தொடர்புகொள்வது சிரமம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மனக்கசப்பு

ரகசியங்கள் மனக்கசப்பை ஏற்படுத்துகின்றன. ஒருவரின் கருத்தை மற்றொருவர் கேட்கவில்லையென்றால் அது மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. இதனால் கோவம், வெறுப்பு ஏற்படுகிறது. ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ளவில்லையென்றாலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

தேவைகள் நிறைவேற்றப்படாதபோது,

முக்கிய தகவல்களை ஒரு பார்ட்னர் மறைத்தால், இருவருமே தேவைகள் மற்றும் ஆசைகளை தெரிவித்துக்கொள்வது கடினமாக இருக்கும். உங்கள் தேவைகள் மற்றம் ஆசைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது கூடுதல் அதிருப்தி மற்றும் கசப்பான உணர்வை இருவரிடமும் ஏற்படுத்தும்.

கலந்துரையாடல் குறையும்

ரகசியங்கள் இருவரும் பேசுவதையே குறைத்துவிடும். சில விஷங்கள் குறித்து பேசுவதற்கு சங்கடமாகவும், அவமானமாகவும் உணர்வார்கள். இது உறவில் புரிதலின்மை மற்றும் டென்ஷனை ஏற்படுத்தும். தம்பதிகளுக்கு பிரச்னைகளை தீர்க்க கஷ்டமாக இருக்கும்.

உணர்வுப்பூர்வமாக தள்ளியிருத்தல்

பார்ட்னரிடம் ரகசியம் வைப்பது உணர்வுப்பூர்வமாக விலகியிருக்க வைத்துவிடும். தம்பதிகள் விமர்சனத்துக்கு பயந்து தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. இது அவர்களை விலக்கும். ஆரோக்கியமான உறவை சிதைக்கும்.

உங்களுக்கு சௌகரியமான நேரத்தில் உங்கள் கருத்துக்களை உங்கள் பார்ட்டனருடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் இருவருமே வேலையாக இருந்தால் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். இருவருமே தங்களின் கருத்துக்களை வெளிப்படையாக பேசுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். 

இது தம்பதிகளுக்கு தங்களை புரிந்துகொள்ள உதவும். ஏதாவது ஒரு சூழலை உருவாக்கி உங்களுக்கு பிரச்னையானவற்றை பேசி தீர்த்துக்கொள்வது உறவு வலுப்பட வழிவகுக்கும். எப்போது தொடர்புகொள்வது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். எனவே இருவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படவேண்டும்.

உறவில் நேர்மையாக இருப்பது எப்படி?

திறந்த மனதுடன், நேர்மையாகவும், இருவரும் பொறுமையாகவும் இருந்து நம்பிக்கையையும், மரியாதையான சூழலையும் உருவாக்க வேண்டும்.

ஒரு நேரத்தை ஒதுக்கு பேச வேண்டிய பிரச்னைகளை பேசி முடித்துவிடுங்கள்.

ஒவ்வொருவரின் வார்த்தைக்கும் மதிப்பு கொடுங்கள். அதுகுறித்து எந்த விமர்சனமும் வேண்டாம்.

ஒருவேளை ரகசியம் காத்தாலும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.

ஒருவரின் எல்லையை உணருங்கள். எதை இருவருக்குள்ளும் வைத்துக்கொள்ள வேண்டும். எந்த விஷயத்தை வெளியில் சொல்ல வேண்டும் என்ற எல்லையை வகுத்துக்கொள்ளுங்கள்.

வெளிப்படையாகவும், அடுத்தவர்களை காயப்படுத்தாமலும் பேசுங்கள்.

ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உணர்ந்துகொள்ளுங்கள். தனிப்பட்ட விஷயங்களுக்கு இடம் கொடுங்கள்.

கடிதம் எழுதுவது, மெசேஜ் அனுப்புவது என்று திறந்த மனதுடன் பேசுவதற்கு பல்வேறு வழிகளை தேர்ந்தெடுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்