தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Relationship : உறங்கச் செல்லும் முன் கணவன் – மனைவி இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்!

Relationship : உறங்கச் செல்லும் முன் கணவன் – மனைவி இதையெல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும்!

Priyadarshini R HT Tamil
Sep 26, 2023 12:00 PM IST

Relationship : உறங்கச்செல்லும் முன் கணவன் – மனைவி இருவரும் கட்டாயம் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

உறங்கச்செல்லும் முன் கணவன்-மனைவி கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?
உறங்கச்செல்லும் முன் கணவன்-மனைவி கட்டாயம் செய்ய வேண்டியது என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

எனவே இரு தனிநபர்கள் சேர்ந்து வாழும்போது, அடிப்படை அன்பு காரணமாக இருக்க வேண்டுமேயொழிய, சமூகத்தின் நிர்பந்தம், குழந்தைக்கான வாழ்க்கை என்பது இருக்கக்கூடாது. எனவே முடிந்தளவு அன்பை வளர்க்க தேவையான அனைத்தையும் இருவரும் சேர்ந்து செய்யவேண்டும். அந்த அன்பு குறையும்போதோ அல்லது வற்றும்போதோதான் பிரிவு என்பது ஏற்படுகிறது. எனவே அன்பை குறையாமல் பார்த்துக்கொள்ள என்ன செய்யவேண்டும்.

கணவருக்கு பிடித்ததை சமைத்துக்கொடுப்பதோ அல்லது மனைவிக்கு வேண்டியதை வாங்கிக்கொடுப்பதோ அந்த நேரத்திற்கான தீர்வாக மட்டுமே இருக்க முடியுமோ அது ஆழமான அன்பை நிச்சயம் வளர்த்தெடுக்காது. 

ஒருவரையொருவர் மதிக்கும்போதும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும்போதும் ஏற்படுவதே உண்மையான அன்பு. எனவே அதை வளர்த்தெடுக்க நீங்கள் செய்ய வேண்டியது என்ன என்று கவனிக்க வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் தங்களின் அனறாட வேலைகளில் தீவிரமாக இருப்பார்கள். எனவே அவர்கள் இருவரும் உறங்கச்செல்லும் முன் தங்களுக்காக சிறிது நேரத்தை செலவிடவேண்டும். 

அன்று அவர்களின் நாள் எப்படி இருந்தது அல்லது அவர்கள் சார்ந்த எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இருவரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

படுக்கையறைக்குள் சென்றவுடன் அவர்கள் ஒருவரையொருவர் கட்டாயம் கட்டிப்பிடிக்க வேண்டும். இது அவர்களின் அன்பு ஆழமாக உதவுகிறது. அந்தகாலம்போல் வெட்கப்பட தேவையில்லை. 

எனவே கட்டிப்பிடித்தல் என்பது அன்பின் வெளிப்பாடு. குழந்தைகள் இருக்கிறார்கள் என்றெல்லாம் பார்க்க தேவையில்லை. குழந்தைகளுக்கும் கட்டிப்பிடித்தல் என்பது அன்பின் வெளிப்பாடு என்று சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.

இரவில் மனைவி அவரின் கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறார் என்றால், கணவர் அதை கவனிக்கவேண்டும். 

ஏனெனில் திருமணமாகி ஒரு பெண் ஒரு புது இடத்திற்கு முற்றிலும் வருகிறார் என்றால், அங்கு அவருக்கு நிறைய பிரச்னைகள் இருக்கும். எனவே அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு அதற்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.

இரவு உணவு என்பது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டே ஆகவேண்டிய ஒன்று. முடிந்தால் ஒருவருக்கு ஒருவர் ஊட்டிவிடலாம். அது கணவன் – மனைவி இடையே மேலும் சிறிது நெருக்கத்தை வளர்க்கும்.

தூங்குவதற்கு முன் கட்டாயம் உங்கள் இணையரின் ஆசைகளை தெரிந்துகொள்ளவேண்டும். குறிப்பாக நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்றால் உங்களுக்கு என்ன தேவை என்பதை இருவரும் பரிமாறிக்கொண்டு அதற்கு ஏற்றாற்போல் உங்கள் வாழ்க்கையை இன்பமாக்கிக்கொள்ள வேண்டும். 

கணவன்-மனைவி இருவரிடையே ஏற்படும் பிரச்னையை இருவருமே பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும். இருவரிடையே பெரிய பிரச்னைகள் என்றால் வீட்டில் பெரியவர்களுடன் கலந்தாலோசிக்கலாம். நிச்சயம் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

அன்பை அதிகரிக்கும் அத்தனையும் செய்யவேண்டும். எனவே கணவன்-மனைவி இருவரும் ஒருவரையொருவர் மதித்து வாழ்ந்தாலே வாழ்க் இனிக்கும். மகிழ்ந்திருங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்