Reduce Belly Fat : பிதுங்கும் தொப்பை! பிடித்து இறுக்கும் உடைகள்! இரவு உணவை நிறுந்துங்க! இந்த ஒரு பானம் எடுங்க!-reduce belly fat tummy belly tight clothes stop for dinner take this one drink - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Reduce Belly Fat : பிதுங்கும் தொப்பை! பிடித்து இறுக்கும் உடைகள்! இரவு உணவை நிறுந்துங்க! இந்த ஒரு பானம் எடுங்க!

Reduce Belly Fat : பிதுங்கும் தொப்பை! பிடித்து இறுக்கும் உடைகள்! இரவு உணவை நிறுந்துங்க! இந்த ஒரு பானம் எடுங்க!

Priyadarshini R HT Tamil
Jul 02, 2024 01:00 PM IST

Reduce Belly Fat : பிதுங்கும் தொப்பையை பிடித்து இறுக்கும் உடைகள். இரவு உணவை நிறுத்திப்பாருங்கள். ஆனால் பசிக்கும் இல்லையா? அதற்கு இந்த ஒரு பானத்தை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.

Reduce Belly Fat : பிதுங்கும் தொப்பை! பிடித்து இறுக்கும் உடைகள்! இரவு உணவை நிறுந்துங்க! இந்த ஒரு பானம் எடுங்க!
Reduce Belly Fat : பிதுங்கும் தொப்பை! பிடித்து இறுக்கும் உடைகள்! இரவு உணவை நிறுந்துங்க! இந்த ஒரு பானம் எடுங்க!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உடல் பருமன்

உடலில் கொழுப்பு அதிகரிக்கும்போது உடல் எடை அதிகரிக்கிறது. உடல் பருமனை நாம் அழகு பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது. இது மருத்துவ பிரச்னையும் ஆகும். இது பல நோய்கள் மற்றும் உடல் உபாதைகளை அதிகரிக்கிறது.

இது இதய நோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, கல்லீரல் கோளாறுகள், உறக்கப் பிரச்னைகள் மற்றும் சிலவகை புற்றுநோய்களையும் இது ஏற்படுத்துகிறது.

சிலருக்கு உடல் எடையை குறைப்பது மிக சவாலான ஒன்றாக இருக்கலாம். உடல், சூழல், உணவு, உடற்பயிற்சியின்மை, மரபு என உடல் பருமனுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கொஞ்சம் அளவு எடையைக் குறைத்தாலும் அது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி, வாழ்வியல் மாற்றங்கள் ஆகிய யாவும் உங்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

உடல் பருமனுக்கு சிகிச்சையளிப்பதில் மருந்து மாத்திரைகளும் இடம் பெறுகின்றன. உடல் எடையிலும் தொப்பையை கரைப்பது மிகவும் கடினமானது. அந்த தொப்பையை குறைத்தாலே போதும் உங்களுக்கு அது உடல் எடை குறைப்பில் மிகவும் உதவிகரமான ஒன்றாக இருக்கும்.

ஆனால் இயற்கை வழிகளிலும் உடல் எடையை குறைக்க முடியும். அதற்கு சில பானங்கள் உதவுகின்றன. அவை உங்கள் உடல் எடையை குறைப்பதுடன், உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கின்றன. அதில் ஒன்றை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். இங்கு இன்று பகிரப்பட்டுள்ள இந்த பானம் உங்கள் தொப்பையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

நீங்கள் இரவு உணவை முற்றிலும் தவிர்த்துவிட்டு இந்த பானத்தை மட்டும் பருகவேண்டும். இது உங்கள் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். குடலை பாதுகாக்கும். தொற்றுக்களை தவிர்க்கும். கழிவுகளை அடித்து வெளியேற்றும். சுவையும், ஆரோக்கியமும் நிறைந்ததும் கூட.

தேவையான பொருட்கள்

ஆப்பிள் அல்லது கிரீன் ஆப்பிள் – 1

இதில் உள்ள குறைவான கலோரிகள் மற்றும் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தரும். இதனால் நீங்கள் வேறு எதையும் உட்கொள்ளவேண்டும் என்ற நிலை ஏற்படாது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.

வாழைப்பழம் – 1

இவையிரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த பானத்தில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. இது சுவையானதும் கூட.

பால் – ஒரு டம்ளர்

ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம், பால் மற்றும் ஓட்ஸ் ஆகிய அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அடித்துக்கொள்ளவேண்டும். இது சுவை நிறைந்த ஸ்மூத்தியாக இருக்கும். இதில் உடலுக்கு தேவையான ஆற்றல், நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களும் இருக்கும்.

இதை இரவு உணவாகவும் பருகலாம் அல்லது காலை உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு இதன் பலன் எப்படி உள்ளது என்று பாருங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.