தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Rain Diseases And Remedies : நெருங்குகிறது மழைக்காலம்! அச்சுறுத்தும் வைரஸ்கள்! தீர்வு தரும் சித்த மருத்துவம்!

Rain Diseases and Remedies : நெருங்குகிறது மழைக்காலம்! அச்சுறுத்தும் வைரஸ்கள்! தீர்வு தரும் சித்த மருத்துவம்!

Priyadarshini R HT Tamil
Aug 14, 2023 12:00 PM IST

Rain and Diseases : மழைக்காலம் தொடங்கிவிட்டது. கொசுத் தொல்லை அதிகரித்து வருகிறது. குளிர் வாட்டுதிறது. இக்கால கட்டத்தில் தான் பல நோய்கள் தீவிரமடைகிறது,

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

• டைபாய்ட் காய்ச்சல்

• மூட்டு வலி

• மலக்கட்டு

• சளி

• இருமல்

• வைரஸ் காய்ச்சல்

• மூக்கடைப்பு

• ஆஸ்த்துமா

• ரத்தம் உறைதல் நோய்

• மாரடைப்பு

போன்ற நோய்கள் அதிகம் ஏற்படுகிறது.

இவற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில், தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூடாக குடிக்க வேண்டும். இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் இந்த நடைமுறையை பின்பற்றினால்,

மஞ்சள் காமாலை நோய்,

சிறுநீர் தொற்று,

சிறுநீரக கற்கள்,

பசியின்மை,

வாந்தி,

செரியாமை

டைபாய்டு காய்ச்சல்

மலக்குடல் ரத்தம் உறைதல்,

வெரிகோஸ்வெயின்,

இதய பாதிப்பு

சளி,

காய்ச்சல்

இருமல்,

மூச்சு திணறல்,

ஆஸ்துமா

சைனஸ் பிரச்னை

போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.

மழை காலத்தில் பொதுவாக உணவுக்காக பயன்படுத்தப்படும் காய், கீரை வகைகளை பழங்களை நன்கு கழுவி சுத்தப்படுத்திதான் சமைக்க வேண்டும். ஈரமான துணிகளை உடுத்தக்கூடாது. ஈரமான படுக்கைகளில் படுக்கக்கூடாது.

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டியவை

மூட்டு வலி, இடுப்பு வலி, ஆஸ்துமா, இதய நோயாளிகள், இதய அறுவை மருத்துவம் செய்தவர்கள், சைனஸ் தொந்தரவு, மூக்கடைப்பு, ஆஸ்துமா

நோயாளிகள், தோல் நோய் உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது. மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். படுக்கை அறை, இருப்பிட அறைகள், அலுவலக அறைகளை தினசரி திறந்து வெளிச்சம் வரும்படி, தெரியும்படி செய்வது பல்வேறு நோய்கள் தொற்று ஏற்படுவதை தவிர்க்க முடியும்.

மழைக்காலத்தில் மீன், நண்டு, இறால், கருவாடு, முட்டை, பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள், பழைய சோறு, பழைய குழம்பு, இவைகளை உண்பதை தவிர்ப்பது செரிமானக் கோளாறு வாந்தி, பேதி வராமல், புட் பாய்சன் ஆகாமல் தடுக்க உதவும்.

மழைக் காலத்தில்

• குளிர் பானங்கள்

• சாக்லேட்,

• பிஸ்கட்ஸ்,

• கேக் வகைகள்,

• பாக்கெட்டுகளில், அடைத்து விற்கப்படும் உணவு திண்பண்டங்களை குழந்தைகளுக்கு வாங்கி தரக்கூடாது. நீங்களும் சாப்பிடக்கூடாது.

• துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அறவே சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

• மழைக்காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக்கூடாது. குளித்தால், உடல் குளிர்ந்து குளிர் காய்ச்சல், சளி, இருமல், ஆஸ்துமா வர வாய்ப்புண்டு.

• மழையில் நனைந்தால் ஈரத்தலையுடன் இருப்பது, நனைந்த துணியுடன் இருப்பது சளி, இருமல் காய்ச்சல் வர வாய்ப்பாக அமையும்.

• ஆஸ்துமா நோயாளிகள் மழைக் காலத்தில் கீரை வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. மீறினால் சளி இருமல் ஆஸ்துமா நோய் தீவிரமடையும்.

மழைக்கால நோய்களில் டெங்கு காய்ச்சல் அதிகம் வரலாம். பரவலாம். எனவே நம்மை சுற்றி மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசு உற்பத்தியாகும். பகலில் தான் டெங்கு கொசு கடிக்கும்.

கொசுவை விரட்ட கொசுவலை, இயற்கை மூலிகை தூபங்கள் (வேப்பிலை நொச்சி தும்பை, துளசி ஓமவள்ளி, கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம்) இவைகளை கலந்து இரவு படுக்கைக்கு செல்லும் முன் தூபம் போட கொசு ஓடி விடும்.

மழைக்கால சளி இருமல் ஆஸ்துமா, தும்மல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் இருந்தால்,

தாளிசாதி சூரணம் -

1 முதல் 12 வயது வரை கால் டீஸ்பூன் எடுத்து தேன் நிறைய விட்டு குழைத்து 3 வேளை உணவிற்கு பிறகு கொடுக்கலாம்.

12 வயதிற்கு மேல் அரை டீஸ்பூன் எடுத்து தேன் விட்டு குழைத்து 3 வேளை உணவிற்கு பின் கொடுக்கலாம். சர்க்கரை நோயாளிகள் தேன் சேர்த்து சாப்பிட பயமாக இருந்தால் காய்ச்சிய பாலில் கலந்து குடிக்கலாம் தரமான மருந்தாக இருக்கவேண்டும்.

சுவாசக் குடோரி மாத்திரை:

வெள்ளெருக்கம் பூ, மிளகு, வெற்றிலைச்சாறு சேர்ந்தது.

1 முதல் 12 வயது வரை 1 மாத்திரை 3 வேளை உணவிற்கு பின்

12 வயதிற்கு மேல் 2 மாத்திரை 3 வேளை உணவிற்கு பின் மூச்சு திணறல் தீரும் வரை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம்

பவள பற்பம்:

100 மி.கி முதல் 200 மி.கி வரை வேண்டிய அளவு எடுத்து கலந்து தாளிசாதி சூரணத்துடன் கலந்து தேனில் குழைத்து வழங்கலாம்

தூதுவளை நெய்:

10 மிலி முதல் 30 மிலி வரை 3 வேளை சாப்பிடலாம்

திப்பிலி ரசாயனம் லேகியம்:

5 கிராம் முதல் 15 கிராம் வரை எடுத்து சப்பி சாப்பிடலாம்.

தாளிச்சாதி வடகம் மாத்திரை:

இருமல் தொடர்ந்து இருந்தால் ஒன்று அல்லது இரண்டு எடுத்து சப்பி சாப்பிடலாம்.

அதிமதுர மாத்திரை:

அதிமதுரம் மாத்திரையும் இருமலுக்கு தொண்டை கரகரப்பு தொண்டைகட்டுக்கு சிறந்தது.

தேவைக்கு மருத்துவரை அணுகுவது நல்லது.

தகவல் – மருத்துவர். காமராஜ், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஓய்வு), திருச்சி.

WhatsApp channel

டாபிக்ஸ்