தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ragi Roti : சுவையும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ராகி ரொட்டி! இனிப்பு, காரம் என இரு சுவைகளில், இதோ 2 ரெசிபி!

Ragi roti : சுவையும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ராகி ரொட்டி! இனிப்பு, காரம் என இரு சுவைகளில், இதோ 2 ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jul 03, 2024 06:55 AM IST

Ragi roti : சுவையும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ராகி ரொட்டி. இதில் இனிப்பு, காரம் என இரு சுவைகளிலும் ரொட்டி செய்யலாம். இதோ 2 ரெசிபிக்களும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Ragi roti : சுவையும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ராகி ரொட்டி! இனிப்பு, காரம் என இரு சுவைகளில், இதோ 2 ரெசிபி!
Ragi roti : சுவையும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ராகி ரொட்டி! இனிப்பு, காரம் என இரு சுவைகளில், இதோ 2 ரெசிபி!

ராகியில் இனிப்பு, காரம் என இரண்டு வகை ரொட்டிகளும் செய்யலாம்.

கார ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப்

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2

ட்ரெண்டிங் செய்திகள்

சீரகத்தூள்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ராகி மாவை பாத்திரத்தில் சேர்த்து அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய், உப்பு, சீரகத்தூள் சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை சூடாக்கி, அதில் வைத்து தட்டவேண்டும். இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்தால் சுவையான கார ராகி ரொட்டி தயார். இதை சட்னி அல்லது சாம்பாருடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இனிப்பு ராகி ரொட்டி செய்ய தேவையான பொருட்கள்

ராகி மாவு – ஒரு கப்

வெல்லம் – 150 கிராம்

ஏலக்காய் – 2

உப்பு – தேவையான அளவு

செய்முறை

ராகி மாவில் வெல்லத்தை பாகுகாய்ச்சி ஊற்றி, ஏலக்காயை பொடிசெய்துபோட்டு பிசைந்துகொள்ளவேண்டும்.

பின்னர் அதை தோசைக்கல்லில் தட்டி, இனிப்பு ரொட்டிகளாக சுட்டு எடுக்கவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள எதுவுமே தேவையில்லை. இதை அப்படியே சாப்பிடலாம்.

இது இரண்டுமே நல்ல மாலை நேர சிற்றுண்டியாகும். பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதை செய்துகொடுத்தால் அவர்களும் மகிழ்வார்கள். சூப்பர் சுவையில் அசத்தும் இந்த இரண்டு ரெசிபிக்களையும் கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

ராகியின் நன்மைகள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

இந்த கேழ்வரகை சேர்ப்பதில் உள்ள கூடுதல் நன்மை என்னவென்றால், இந்த ராகி பயிர் மட்டும் உரங்கள் தெளித்தால் வளராது. அதற்கு உரங்களே தேவையில்லை என்பதால், இது நச்சுக்கள் கலக்காதது. இத்தனை நன்மைகள் கொண்ட ராகியை அடிக்கடி உணவில் சேர்ப்பதை உறுதிப்படுத்துங்கள்.