Basil Leaves Benefits: வாயு மற்றும் வயிறு உப்புசம் பிரச்னைகளை தடுக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் துளசி!
Basil Leaves Benefits : துளிசியில் நோய் தடுப்பு பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தொடர்ச்சியாக துளிசி கலந்த நீரை பருகினால் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுவதுடன், நோய் தொற்று பாதிப்பில் இருந்து உடலை மீள் தன்மை அடைய செய்கிறது

துளசியில் இடம்பிடித்திருக்கும் பிளேவணாய்ட், பாலிபீனால், அ்டிப்படை எண்ணெய்கள் சிறந்த ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்கள் நடுநிலை ஆக்குகிறது. அத்துடன் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, செல்கள் பாதிப்பு அடையாமல் பார்த்துகொள்கிறது.
புனித தன்மை மிக்க செடி
ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக இருந்து வரும் துளசி வீட்டிலேயே வளர்க்கூடிய செடி வகையாக உள்ளது. மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படும் துளிசியை பச்சையாகவே சாப்பிட்டால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். இந்து மதத்தில் இதுவொரு புனித தன்மை மிக்க செடியாக வணங்கப்படுகிறது.
துளிசியில் நோய் தடுப்பு பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளன. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். தொடர்ச்சியாக துளிசி கலந்த நீரை பருகினால் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுவதுடன், நோய் தொற்று பாதிப்பில் இருந்து உடலை மீள் தன்மை அடைய செய்கிறது
