Instant Ragi Idly : வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைவேண்டாம் இதோ இன்ஸ்டன்டாக ராகியில் செய்து அசத்தலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Instant Ragi Idly : வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைவேண்டாம் இதோ இன்ஸ்டன்டாக ராகியில் செய்து அசத்தலாம்!

Instant Ragi Idly : வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைவேண்டாம் இதோ இன்ஸ்டன்டாக ராகியில் செய்து அசத்தலாம்!

Priyadarshini R HT Tamil
Apr 21, 2024 11:00 AM IST

Instant Ragi Idly : இட்லிக்கு மாவு அரைக்காத நேரத்தில் செய்ய இன்ஸ்டென்ட் ராகி இட்லி ரெசிபி இதோ.

Instant Ragi Idly : வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைவேண்டாம் இதோ இன்ஸ்டன்டாக ராகியில் செய்து அசத்தலாம்!
Instant Ragi Idly : வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைவேண்டாம் இதோ இன்ஸ்டன்டாக ராகியில் செய்து அசத்தலாம்!

சம்பா ரவை – ஒரு கப்

கெட்டி தயிர் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

நெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை – ஒரு கைப்பிடியளவு

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

துருவிய கேரட் – ஒரு கப்

வர மிளகாய் – 2

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – சிறிது

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, சம்பா ரவை, தயிர் மூன்றையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடானதும், கடுகு, உளுந்து தாளித்து கடலை சேர்த்து வறுக்க வேண்டும். அதில் கிள்ளிய வர மிளகாய், கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.

பின்னர் இதில் வெங்காயம், கேரட், மல்லித்தழை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கவேண்டும்.

வதக்கிய அனைத்தையும் மாவுடன் சேர்த்து கலந்து இட்லி தட்டுகளில் இட்லிகளாக வார்த்து எடுக்கவேண்டும். இதை தோசைக்கல்லில் சேர்த்து தோசைகளாகவும் வார்த்துக்கொள்ளலாம். 

இதற்கு தொட்டுக்கொள்ள கடலைச் சட்னி, புதினா சட்னி அல்லது மல்டி வெஜிடவுபுள் குருமா சிறப்பாக இருக்கும் அல்லது வழக்கமான சட்னி சாம்பாரும் நன்றாக இருக்கும்.

அசைவ குழம்புகள் மற்றும் குருமா இதற்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

இது வயதானவர்களுக்கு குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த ப்ரேக் ஃபாஸ்ட். குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் காலை உணவாகவும் இருக்கும்.

ராகி, பொதுவாக அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய ஒரு உணவு. எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

ராகியில் பல்வேறு உணவுகள் இருந்தாலும் இதுபோன்ற இன்ஸ்டன்ட் இட்லி உங்களுக்கு வித்யாசமான சுவையில் அசத்தலாக இருக்கும். இதை காலை மற்றும் இரவு நேரத்தில் டிபஃனுக்கு செய்துகொள்ளலாம்.

இன்னும் தேவைப்பட்டால் பச்சை பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகளை சேர்த்தும் இந்த இட்லியைச் செய்யமுடியும்.

ராகி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

100 கிராம் ராகியில் 320 கலோரிகள் உள்ளன. புரதச்சத்து 7 கிராம் உள்ளது. கார்போட்ரேட் சத்துக்கள் 67 கிராம் உள்ளது. நார்ச்சத்து 11 கிராம் உள்ளது. கால்சிய சத்து 364 மில்லி கிராம் உள்ளது. இரும்புச்சத்து 4.62 மில்லி கிராம் உள்ளது.

நீங்கள் சைவ உணவுப்பிரியர் என்றால் கேழ்வரகு சிறந்த புரதச்சத்தை வழங்குகிறது. இதை நீங்கள் தினசரி உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இது சுவை நிறைந்ததும் கூட ஆகும்.

அதிக நார்ச்சத்து நிறைந்தது. இதனால், கேழ்வரகு உங்கள் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

ராகி, உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. இதில் உள்ள அதிக புரதச்சத்து அடிக்கடி பசி ஏற்படாமல் தடுக்கிறது.

ராகியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. அது உடலில் செல்கள் சேதமடைவதை தடுக்கிறது.

ராகியில் தலை முடி ஆரேக்கியத்துக்கு உதவக்கூடிய ஊட்டச்சத்துக்கள், முடி உதிர்வை தடுக்கிறது. தலைமுடி வளர்ச்சியையும் அதிகரிக்கிறது.

ராகியை வழக்கமாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்பு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது.

கர்ப்பகாலத்திற்கு ஏற்ற உணவென்றால் அது ராகி. இது பால் சுரப்புக்கு மட்டுமல்ல தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் ரத்தச்சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

ராகியில் உள்ள ஃபைட்டோ கெமிக்கல்களில் கேன்சருக்கு எதிரான குணம் கொண்டது.

குளூட்டன் இல்லாத டயட் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கு ராகி சிறந்த தேர்வு. இயற்கையிலே அது குளுட்டன் ஃப்ரியாக உள்ளது.

குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதில் புரதச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, துத்தநாதம் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதய நோய்களை தடுக்கிறது.

அனீமியாவுக்கு சிகிச்சையளிக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.