Ragi Laddu : ஆயுசுக்கும் கால்சியம் குறைபாடு இல்லாமல் இருக்க வேண்டுமா? தினமும் இந்த ஒரு உருண்டை போதும்!
Ragi Laddi : இரவில் உறங்கச் செல்லும் முன் சாப்பிடக்கூடாது. சர்க்கரை உள்ளவர்கள் குறைவான இனிப்பை சேர்த்து சாப்பிடலாம். இனிப்பு வேண்டாம் என்றால், உப்பு சேர்த்துக்கூடாது உருண்டை பிடித்துக்கொண்டு சாப்பிடலாம். அதுவும் நன்றாக இருக்கும். கர்ப்பிணிகளும் எடுத்துக்கொள்ளலாம். எதையுமே அளவாக எடுத்துக்கொள்ளவும்.
எலும்பு தேய்மானம், எலும்பு தொடர்பான பிரச்னைகள், மூட்டு வலி, கை-கால் வலி, கை-கால் குடைச்சல், பாத வலி, இடுப்பு வலி, உடல் சோர்வு, முடி உதிர்வு பிரச்னை, கண் பார்வை குறைபாடு என அனைத்தையும் சரிசெய்யும் இந்த ஒரே ஒரு உருண்டை. தினமும் சாப்பிட்டு கட்டாயம் பலன்பெறுங்கள். 80 வயதிலும் 20 வயதுபோல் ஆரோக்கியம் தரும்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை – 100 கிராம்
(தினமும் ஒரு கைப்பிடியளவு வேர்க்கடலை எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்பு நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும். இதில் அதிகளவில் நார்ச்சத்துக்கள் மற்றும் புரதச்சத்துக்கள் உள்ளது. நரம்பு மண்டலத்து வலு கொடுக்கும். நரம்பு தொடர்பான பிரச்னைகளை முற்றிலும் குணப்படுத்திவிடும்)
ராகி – கால் கிலோ
(கால்சியம், நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி, இ, பி, புரதச்சத்து, இரும்புச்சத்துக்கள் ஆகியவை உள்ளன. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். காரணமே இல்லாமல் உடல் வலி அதிகமாக இருந்தாலோ அல்லது உடல் சோர்வு அதிகம் இருந்தாலோ இதை நீங்கள் சாப்பிட்டு வந்தால் நீங்கள் வித்யாசத்தை உணரலாம்)
பேரிச்சை பழம் – 100 கிராம்
(நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் அல்லது கருப்பட்டி என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
உப்பு – தேவையான அளவு
ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்
நெய் – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி பருப்பு – ஒரு கைப்பிடியளவு
செய்முறை
கடலையை வறுத்து தோல் நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ராகி மாவையும் குறைவான தீயில் வறுக்க வேண்டும். மாவு கொஞ்சம் நிறம் மாற வேண்டும். அதிகம் வறுத்துவிட்டால் முற்றிலும் நிறம் மாறி தீய்ந்துவிடும். எனவே வாசம் வரும் வரை பார்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் காய்ந்த மிக்ஸி ஜாரில், கடலையை இரண்டு முறை மட்டுமே அடித்துவிட்டு, பின்னர் ராகி மாவை சேர்த்து அடிக்க வேண்டும்.
அடுத்து பேரிச்சைபழத்தை சேர்த்து அடிக்க வேண்டும். நாட்டுச்சர்க்கரை, வெல்லம் அல்லது கருப்பட்டி எடுத்திருந்தால் அதை சேர்த்து அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றிவிட்டு, அதில் உப்பு, ஏலக்காய்ப்பொடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
இதை ஒரு வயது குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
தினமும் இதை ஒரு உருண்டை சாப்பிட்டால் கால்சியம் குறைபாடு, ஹீமோகுளோபின் பிரச்னைகள், முடி உதிர்வு முற்றிலும் நீங்கிவிடும். பார்வை குறைபாடு குணமாகும்.
100 கிராம் கேழ்வரகில் 324 மில்லிகிராம் கால்சியம் சத்து உள்ளது. 146 மில்லி கிராம் மெக்னீசியம், 210 மில்லிகிராம் பாஸ்பரஸ் சத்து உள்ளது. கீழே விழுந்தவுடன் எலும்பு உடையக்கூடிய அளவுக்கு இருப்பவர்களின் எலும்பு வலுப்பெறும்.
ரத்த நாளங்களில் உள்ள அடைப்பை சரிசெய்யும். நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் பி3 நமது உடலில் உள்ள நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து, கெட்ட கொழுப்பை குறைத்து வெளியேற்றும்.
இரவில் உறங்கச் செல்லும் முன் சாப்பிடக்கூடாது. சர்க்கரை உள்ளவர்கள் குறைவான இனிப்பை சேர்த்து சாப்பிடலாம். இனிப்பு வேண்டாம் என்றால், உப்பு சேர்த்துக்கூடாது உருண்டை பிடித்துக்கொண்டு சாப்பிடலாம். அதுவும் நன்றாக இருக்கும். கர்ப்பிணிகளும் எடுத்துக்கொள்ளலாம். எதையுமே அளவாக எடுத்துக்கொள்வது நல்லது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்