தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Potato Meal Maker Fry : உருளைக்கிழங்கு, மீல்மேக்கர் வறுவல்! அடித்து நொறுக்கும் சுவைக்கு இப்படி செஞ்சு பாருங்க!

Potato Meal maker Fry : உருளைக்கிழங்கு, மீல்மேக்கர் வறுவல்! அடித்து நொறுக்கும் சுவைக்கு இப்படி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Apr 22, 2024 07:00 AM IST

Potato Mealmaker Fry : உருளைக்கிழங்கு, மீல்மேக்கர் வறுவல் செய்வது எப்படி?

Potato Meal maker Fry : உருளைக்கிழங்கு, மீல்மேக்கர் வறுவல்! அடித்து நொறுக்கும் சுவைக்கு இப்படி செஞ்சு பாருங்க!
Potato Meal maker Fry : உருளைக்கிழங்கு, மீல்மேக்கர் வறுவல்! அடித்து நொறுக்கும் சுவைக்கு இப்படி செஞ்சு பாருங்க!

ட்ரெண்டிங் செய்திகள்

பெரிய வெங்காயம் – அரை கப் (பொடியாக நறுக்கியது)

தக்காளி – அரை கப் (பொடியாக நறுக்கியது)

சோம்பு – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மிளகாய்த்தூள் – அரை ஸ்பூன்

கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்

கொத்தமல்லி இலை – கால் கப் (நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மீல்மேக்கரை எடுத்து கொள்ளவேண்டும். அதில்‌ கொதிக்கும் நீர் ஊற்றி 10 நிமிடங்கள் மூடி‌ வைக்கவேண்டும். பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து கொள்ளவேண்டும்.

உருளைக்கிழகை குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவேண்டும். பின் தோலுரித்து நறுக்கி கொள்ளவேண்டும்.

கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து வாசம் வந்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவேண்டும்.

அவை நன்றாக மசிந்து வதங்கியதும், பிழிந்து வைத்துள்ள மீல்மேக்கர் மற்றும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவேண்டும்.

பின் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக பிரட்டி மேலும் 5 நிமிடங்கள் வதக்கவேண்டும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவேண்டும்.

சுவையான உருளைக்கிழங்கு, மீல்மேக்கர் கறி சாப்பிட தயாராக உள்ளது. இதை சப்பாத்தி, பூரி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

உருளைக்கிழங்கு மற்றும் மீல் மேக்கர் இரண்டுமே குழந்தைகளுக்கு பிடிக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகள் மட்டுமின்றி உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக இந்த உருளைக்கிழங்கு – மீல் மேக்கர் கறி இருக்கும்.

ஒருமுறை ருசித்தால் அடிக்கடி ருசிக்க வேண்டும் என எண்ணுவீர்கள். எனவே கட்டாயம் ஒருமுறை சுவைத்துப்பாருங்கள்.

உருளைக்கிழங்கின் நன்மைகள்

உருளைக்கிழங்கு மாவுச்சத்துக்கள் நிறைந்தது. உருளைக்கிழங்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது துவக்க காலத்தில் வாழ்வைக் காக்கும் உணவாகக் கருதப்பட்டது.

ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி அதற்கு காரணமானது. மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்கள் நமது இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவி செய்கிறது.

நமது உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை காக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

உடல் எடையை குறைப்பதில் உதவி செய்கிறது. செரிமானத்தை ஏற்படுத்துகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பைப்கொடுக்கிறது. 

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலுக்கு பல்வேறு நன்மைகளைக்கொடுக்கும் உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்