தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Capsicum Potato Masala : குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா.. 10 நிமிடத்தில் பட்டுனு செய்யலாம்.. இதோ பாருங்க!

Capsicum Potato Masala : குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா.. 10 நிமிடத்தில் பட்டுனு செய்யலாம்.. இதோ பாருங்க!

Divya Sekar HT Tamil
Apr 25, 2024 12:05 PM IST

Capsicum Potato Masala : பத்தே நிமிடத்தில் சட்டுனு குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா எப்படி செய்வது என்பது குறித்து அதில் காண்போம்.

குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா
குடைமிளகாய் உருளைக்கிழங்கு மசாலா

ட்ரெண்டிங் செய்திகள்

1 உருளைக்கிழங்கு

1/4 டீஸ்பூன் சீரகம்

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1 டீஸ்பூன் சாம்பார் பொடி

1 டேபிள் ஸ்பூன் புளிக்கரைசல்

1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை

1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

உப்பு தேவையான அளவு

செய்முறை

1. குடைமிளகாய் மற்றும் உருளைக் கிழங்கை நீளமாக நறுக்கி கொள்ளவும்.

2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நறுக்கிய கிழங்கை சேர்த்து வதக்கவும். அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து மூடி வைத்து மிதமான சூட்டில் வதக்கவும்.

3. உருளைக்கிழங்கு நன்கு வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்.

4. குடைமிளகாய் லேசாக வதங்கியதும் புளிக்கரைசல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து பிரட்டி சிறிது கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான எளிமையான குடைமிளகாய் உருளை மசாலா தயார்.

குடைமிளகாய் நன்மைகள்

வட்டமாக பார்ப்பதற்கு சிறிய குடை போன்ற தோற்றத்தில் இருக்கும் குடை மிளாகாய் காரம் குறைவாகவும், மருத்துவ குணங்கள் நிறைவாகவும் கொண்ட காய்கறி வகைகளில் ஒன்றாக உள்ளது. குடை மிளகாயை வைத்து பொறியல், சாம்பார் போன்றவற்றை தயார் செய்யலாம். மற்ற காய்கறி வகை உணவுகளுடன் கூடுதல் சுவைக்காக சேர்க்கப்படும் காய்கறி வகையாக குடை மிளகாய் உள்ளது.

அத்துடன் குடைமிளகாய் என்றதும் பலரும் சைனீஸ் வகை உணவுகள் நினைவுக்கு வரும். ப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகளில் தவறாமல் இடம்பிடிக்கும் காய்கறியாக குடை மிளகாய் உள்ளது.பச்சை தவிர சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் குடை மிளகாய், ஹோட்டல்களில் பல வகை உணவை அழகுபடுத்த பயன்படுகின்றன.

குடைமிளகாயில் வைட்டமின் ஏ,பி, சி மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. எடை குறைப்பு, புற்று நோய் தடுப்பு, உடல் வலியை குறைப்பது, பார்வத்திறனை மேம்படுத்துவது, தலைமுடி வளர்ச்சி போன்ற பல்வேறு நன்மைகளை நிறைந்துள்ளன.

குடைமிளகாயின் வடிவத்துக்கு ஏற்ப அதை வைத்து பல்வேறு வகைகளில் உணவுகாக தயார் செய்து சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு நன்மைகள்

உருளைக்கிழங்கு மாவுச்சத்துக்கள் நிறைந்தது. உருளைக்கிழங்கு வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது துவக்க காலத்தில் வாழ்வைக் காக்கும் உணவாகக் கருதப்பட்டது.

ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி அதற்கு காரணமானது. மேலும் இதில் உள்ள எலக்ட்ரோலைட்கள் நமது இதயம், தசைகள் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவி செய்கிறது.

நமது உடலில் எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை காக்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. வீக்கத்தை குறைக்கிறது. புற்றுநோய்க்கு எதிராக போராடுகிறது.

உடல் எடையை குறைப்பதில் உதவி செய்கிறது. செரிமானத்தை ஏற்படுத்துகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பைப்கொடுக்கிறது.

சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. உடலுக்கு பல்வேறு நன்மைகளைக்கொடுக்கும் உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்