தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Post Sex Symptoms : செக்ஸ்க்கு பின் இந்த அறிகுறிகள் உங்களுக்கு தோன்றுகிதா? கவனமாக இருங்கள்.

Post Sex Symptoms : செக்ஸ்க்கு பின் இந்த அறிகுறிகள் உங்களுக்கு தோன்றுகிதா? கவனமாக இருங்கள்.

Priyadarshini R HT Tamil
Aug 15, 2023 11:30 AM IST

Post Sex Symptoms : உங்களின் இன்ஹேலரை அருகிலே வைத்துக்கொள்ளுங்கள். உடலுறவு நிலைகளிலும் கவனமாக செயல்படவேண்டும். என எளிதான நிலையிலே செய்யுங்கள் கடினமான நிலைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள். இது உங்கள் உடலுறவை இன்பமாக்குவதுடன், இயல்பாக்கும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

உடலுறவுக்குப்பின் தலைவலி பொதுவான பிரச்னைதான், ஆனால் மைக்ரைன் போன்ற ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு அது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடியது. உடலுறவுக்குபின் உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால், உடல் செக்ஸின்போது உற்சாகமடைந்தால், அது தலை மற்றும் கழுத்துடன் தொடர்புள்ள தசைகளில் தலைவலியை ஏற்படுத்துகிறது.

உடலுறவின்போது உங்களுக்கு தலைவலி ஏற்பட்டால் நீங்கள் உடனே செக்ஸை நிறுத்தவேண்டும். மைக்ரைனால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக உங்களுக்கு எப்போது உடலுறவில் ஈடுபடும்போதும், தலைவலி ஏற்படும் என்றால் வலி நிவாரணி எடுத்துக்கொள்வது கட்டாயம்.

ஆஸ்துமா

உங்களுக்கு கட்டுப்படுத்த முடியாத ஆஸ்துமா இருந்தால், அது உடலுறவின்போது அதிகமாகிவிடும். ஆஸ்துமா உள்ளவர்கள் நெஞ்சு படபடப்பு, மூச்சுத்திணறல், இருமல், தும்மல் ஆகியவற்றை உடலுறவின்போது அனுபவிக்கிறார்கள். ஆஸ்துமாவுடன் உங்களுக்கு பதற்றமும் இருந்தால் ஆர்கஸம் ஏற்படும்போது உங்களுக்கு ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புள்ளது. அது உங்கள் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

உடலுறவின்போது ஆஸ்துமா அதிகரித்துவிடும், எனவே அதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். பயம் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும் சூழல்களில் இருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள். 

உங்களின் இன்ஹேலரை அருகிலே வைத்துக்கொள்ளுங்கள். உடலுறவு நிலைகளிலும் கவனமாக செயல்படவேண்டும். என எளிதான நிலையிலே செய்யுங்கள் கடினமான நிலைகளை எடுத்துக்கொள்ளாதீர்கள். இது உங்கள் உடலுறவை இன்பமாக்குவதுடன், இயல்பாக்கும்.

மனநிலை மாற்றங்கள் அல்லது சோர்வு

நீங்கள் துன்பமான உடலுறவை உணர்கிறீர்களா? செக்ஸ்க்கு பின்னர் கடுமையான மனநிலை மாற்றங்கள் ஏற்படுகிறதா? இது போஸ்ட்காய்டல் டையஸ்ஃபோராவால் இருக்கலாம். இதில் பெண்கள் அடிக்கடி மகிழ்ச்சியிழக்கிறார்கள். சில பெண்களுக்கு அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. 

இதனால் அழத்துவங்கிவிடுகிறார்கள். 236 பெண்களில் 46 சதவீதம் பேர் ஒரு கட்டத்தில் போஸ்ட்காய்டல் டைஃபோரியாவை அனுபவிக்கிறார்கள் எனற பொது உடலுறவு மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. 5 சதவீத பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுகிறது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உணர்வு ரீதியாக வருந்துவது உங்கள் உறவில் எதிர்மறையாக பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த உணர்வுகளுக்கு தெரபியும், மூச்சுப்பயிற்சிகளும் தேவை. அதை செக்ஸ் முடிந்த பின்னரும், முன்னரும் செய்ய வேண்டும். உங்கள் பார்ட்னரை அரவனைத்து பேசவேண்டும். உங்களுக்கு என்ன பிரச்னை ஏற்படுகிறது என்பதை தெளிவாக பேச வேண்டும். உங்களுக்கு போஸ்ட்காய்டல் டைஸ்ஃபோரியா இருந்தால், அது குறித்து அவர்களிடம் பேச வேண்டும்.

சிறுநீர் பாதை தொற்று

உங்களுக்கு எரிச்சல், வலி அல்லது அரிப்பு ஆகியவை உடலுறவுக்கு பின் ஏற்படுகிறதா? உடலுறவுக்குப்பின் சிறுநீர் கழிக்கும்போது ஒவ்வொரு முறையும் இவற்றையெல்லாம் உணர்ந்தீர்கள் என்றால், உங்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளது என்று பொருள். 

உடலுறவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தவில்லையென்றாலும் அல்லது முறையாக சுகாதாரத்தை பேணவில்லையென்றலாலும், உடலுறவுக்குப்பின் சிறுநீர் பாதை தொற்று ஏற்படும். பெண்ணுறுப்பு தோல் அல்லது யுரித்ராவில் சிறிய கிழிசல் ஏற்படும் அல்லது பிளாடர் பாதையில் வீக்கம் ஏற்படும். இந்த பிரச்னை நீண்ட நாட்கள் இருந்தால், அது உங்கள் சிறுநீரகம், கல்லீரலை பாதிக்கும்.

உடலுறவுக்குப்பின் உங்கள் உடலில் வழக்கத்துக்கு மாறான அசௌகர்யம் ஏற்பட்டால், அதனுடன், காய்ச்சல், உடல்வலி, குளிர் ஆகியவை ஏற்பட்டால் தாமதிக்காமல் நீங்கள் உடனே மருத்துவரை நீங்கள் அணுக வேண்டும். 

மருத்துவரை அணுகுவதுடன் நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தையும் பேண வேண்டும். உங்களுக்கு சிறுநீர் தொற்று இருந்தால், நீங்கள் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும். நீங்கள் உடலுறவு கொண்டால் அது உங்களுக்கு கடுமையான பிரச்னைகளை ஏற்படுத்தும்.

WhatsApp channel

டாபிக்ஸ்