தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pineapple Almond Halwa : குழந்தைகளை குதூகலமடையச் செய்யும் பாதாம், அன்னாசிப்பழ அல்வா

Pineapple Almond Halwa : குழந்தைகளை குதூகலமடையச் செய்யும் பாதாம், அன்னாசிப்பழ அல்வா

Priyadarshini R HT Tamil
Jun 24, 2023 01:42 PM IST

Pineapple Almond Halwa : சிறிது நேரம் கழித்து, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை பழங்களை தூவி கிளறி நன்றாக ஆறியபின் அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் பரிமாறி சாப்பிட்டு மகிழலாம். இந்த முறையில் அன்னாசி, பாதாம் அல்வாவை செய்து சாப்பிட்டு பாருங்கள், தினமும் வேண்டும் என்று விரும்புவீர்கள்.

பாதாம் அன்னாசிப்பழ அல்வா
பாதாம் அன்னாசிப்பழ அல்வா

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த இனிப்பில் சேர்க்கப்படும் பாதாம் கூடுதல் இனிப்பை கொடுக்கக்கூடியது. உங்களுக்கு அன்னாசி பழம் பிடிக்கும் என்றால் இதை நீங்கள் அடிக்கடி செய்து சாப்பிட்டு மகிழலாம். ஆனால் அன்னாசி பிடிக்காத குழந்தைகளுக்கும் அல்வா செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள் என்பதுதான் இதன் சிறப்பு. இதை நீங்கள் அன்னாசி பழத்துண்டுகள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை வைத்து, அழபடுத்தி சாப்பிட்டால் சுவை அள்ளும். 

இதற்கு சர்க்கரை ஒரு முக்கிய இன்கிரியன்ட் என்பதால், நீங்கள் வெள்ளை சர்க்கரை, பிரவுன் சுகர் அல்லது வெல்லம், நாட்டுச்சக்கரை என எதை வேண்டுமானாலும் வைத்து செய்துகொள்ளலாம். ஏதாவது நல்ல நாட்களில் இந்த இனிப்பை செய்யலாம். இதை நீங்கள் செய்தவுடன் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள்.

தேவையான பொருட்கள்

பாதாம் - 250 கிராம்

அன்னாசிப்பழம் - 250 கிராம்

நெய் - 150 கிராம்

கோயா - 150 கிராம்

முந்திரி - 15 கிராம்

சர்க்கரை - 125 கிராம்

ஏலக்காய் பொடி சிறிதளவு

முதலில் அன்னாசிபழத்தை நன்றாக அலசிவிட்டு, தோலை சீவி உள்ளே இருக்கும் சதைப்பகுதியைமட்டும் சிறுசிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது நீங்கள் ஏற்கனவே துண்டுகள் செய்யப்பட்ட அன்னாசி பழங்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய்விட்டு, மிதமான தீயில் அன்னாசி பழத்துண்டுகளை வறுக்கவும். அதன் ஈரம் காயும் வரை விடாமல் அதை கிண்டி வறுக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் பாதாம்களை சிறிது நேரம் ஊறவைத்து உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதை ஒரு பிளண்ட்ர் அல்லது மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது பாதாமை ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் போட்டு, அன்னாசி பழத்தையும் போட்டு நன்றாக கிண்ட வேண்டும். அல்வா பதம் வரும் வரை கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்ததாக சர்க்கரை அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கும் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பிரவுன் சுகரில் ஏதாவது ஒன்றை போட்டு நன்றாக கிண்டவும். அடுத்ததாக கோயாவை போட்டு கிண்டவும். தொடர்ந்து கிண்டிக்கொண்டே இருக்கவும். அப்போதுதான் அல்வா அடிபிடிக்காது. அனைத்து பொருட்களும் நன்றாக கலக்கப்பட்டு அல்வா பதத்திற்கு வந்தபின், அடுப்பை அணைத்துவிட்டு, ஏலக்காய் பொடியை தூவி கிளறி மூடிவைக்க வேண்டும்.

சிறிது நேரம் கழித்து, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சை பழங்களை தூவி கிளறி நன்றாக ஆறியபின் அல்லது சூடாக எப்படி வேண்டுமானாலும் பரிமாறி சாப்பிட்டு மகிழலாம். இந்த முறையில் அன்னாசி, பாதாம் அல்வாவை செய்து சாப்பிட்டு பாருங்கள், தினமும் வேண்டும் என்று விரும்புவீர்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்