தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pesarattu : ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு – மகாளாய அமாவாசை விரத கால உணவு! எப்படி செய்வது?

Pesarattu : ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு – மகாளாய அமாவாசை விரத கால உணவு! எப்படி செய்வது?

Priyadarshini R HT Tamil
Oct 04, 2023 11:02 AM IST

Pesarattu : ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு, மகாளாய அமாவாசை விரத கால உணவு, எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள். தோசைபோலவே பாசிபருப்பு அல்லது பாசிபயறில் செய்வது.

Pesarattu : ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு – மகாளாய அமாவாசை விரத கால உணவு! எப்படி செய்வது?
Pesarattu : ஆந்திரா ஸ்பெஷல் பெசரட்டு – மகாளாய அமாவாசை விரத கால உணவு! எப்படி செய்வது?

ட்ரெண்டிங் செய்திகள்

மாவு தயாரிக்க தேவையான பொருட்கள்

பாசி பயிறு அல்லது பாசி பருப்பு – 2 கப்

அரசி – 4 டேபிள் ஸ்பூன் (இட்லி அரிசி சேர்த்துக்கொள்வது நல்லது)

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 4 பல்

சீரகம் – 2 ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

மேலே தூவி விடுவதற்கு

வெங்காயம் – பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் – பொடியாக நறக்கியது

தேங்காய் – துருவியது

கொத்தமல்லித்தழை – பொடியாக நறுக்கியது

செய்முறை

பாசி பருப்பு மற்றும் அரசியை 2 முதல் 4 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். அதிக நேரம் ஊற வைப்பது நல்லது.

ஒரு கிரைண்டர் அல்லது மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு அனைத்தும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் மாவை சேகரித்துவிட்டு, அதில் சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு, உடனடியாகவே தோசைகளாக வார்த்துக்கொள்ளலாம். இதற்கு புளிக்க வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி மாவு சேர்த்து மெல்லிய தோசைகளாக வார்த்துக்கொள்ள வேண்டும்.

மேலே வெங்காயம், கேரட் துருவல், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை தூவி இருபுறமும் நன்றாக வேகவைத்து எடுத்து பரிமாறவும்.

கடலை, தேங்காய், தக்காளி சட்னி அல்லது சாம்பார் அல்லது காய்கறிகள் குருமா, கறி, கோழி, மீன் குழம்பு என எதுவேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.

மகாளய அமாசாசை விரத காலத்தில் இந்த உணவை இறைவனுக்கு படைத்துவிட்டு, உண்டால் நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel