தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Peanut Chutney : வெங்காயம் சேர்த்து செய்யும் சுவையான வேர்க்கடலைச்சட்னி – டிஃபனுக்கு ஏற்ற சூப்பர் ஜோடி!

Peanut Chutney : வெங்காயம் சேர்த்து செய்யும் சுவையான வேர்க்கடலைச்சட்னி – டிஃபனுக்கு ஏற்ற சூப்பர் ஜோடி!

Priyadarshini R HT Tamil
Sep 12, 2023 12:12 PM IST

Peanut Chutney : வெங்காயம் சேர்த்து வித்யாசமான சுவையில் செய்யும் வேர்க்கடலைச்சட்னி இப்டி செஞ்சு பாருங்க.

வெங்காயம் சேர்த்து கடலைச்சட்னி செய்வது எப்படி?
வெங்காயம் சேர்த்து கடலைச்சட்னி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

வெங்காயம் - 1 நறுக்கியது

பூண்டு - 5 பற்கள்

சிவப்பு மிளகாய் - 8

புளி – சிறிதளவு

கல் உப்பு – தேவையான அளவு

தண்ணீர்

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன்

கடுகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 4

பெருங்காய தூள் – சிறிதளவு

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை -

ஒரு கடாயில் வேர்க்கடலையை சேர்த்து முழுவதுமாக பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவேண்டும்.

அவற்றை முழுவதுமாக குளிர்வித்து, அவற்றின் தோலை அகற்றி, அவற்றை ஒதுக்கி வைக்கவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் சிவப்பு மிளகாய் சேர்க்கவேண்டும்.

சில நொடிகள் வதக்கி, புளி துண்டுகளை சேர்க்கவும். வெங்காயம் வதங்கும் வரை சமைக்க வேண்டும்.

அனைத்தும் ஆறிய பின்னர், ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, வறுத்த வேர்க்கடலை, கல் உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

பின்னர் சிறிது தண்ணீர் சேர்த்து, அனைத்தையும் நன்றாக சட்னியாக அரைக்கவேண்டும்.

தாளிக்க, ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, உளுத்தம் பருப்பு, கடுகு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

கடுகு பொரிய ஆரம்பித்தவுடன், சிவப்பு மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.

தாளிப்பை சட்னிக்கு மாற்றி நன்றாக கலந்துவிட்வேண்டும்.

சுவையான வேர்க்கடலை சட்னி சூடான இட்லிகள் அல்லது தோசைகளுடன் பரிமாறலாம். சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

வேர்க்கடலை சட்னி நிறைய பேருக்கு பிடித்த ஒரு சைட் டிஷ்ஷாகும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள கடலைச்சட்னிக்கு தேங்காய் தேவையில்லை. வெங்காயம் சேர்த்து செய்ய வேண்டும்.

வெங்காயம் மற்றும் புளியும் இந்த வேர்க்கடலை சட்னிக்கு ஒரு வித்யாசமான சுவையை வழங்கக்கூடியது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதில் தேங்காய் சேர்க்காததால், ஃபிரிட்ஜில் வைத்து 2 அல்லது 3 நாட்கள் உபயோகிக்கலாம். விரைவில் கெட்டு விடாது. இந்த சட்னியை மையாக அரைக்கக்கூடாது. கொரகொரப்பாக மட்டுமே அரைக்க வேண்டும். அப்போதுதான் சாப்பிட சுவையாக இருக்கும். இதை நீங்கள் செய்து உங்களுக்கு பிடித்த டிபஃன்களுடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

நன்றி - ஹேமா சுப்ரமணியன். 

WhatsApp channel

டாபிக்ஸ்