தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pasi Payaru Masal:குழந்தைகளுக்கு சத்தான முளை கட்டிய பாசிப்பயிறு மசால்!

Pasi Payaru Masal:குழந்தைகளுக்கு சத்தான முளை கட்டிய பாசிப்பயிறு மசால்!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 12, 2023 12:01 PM IST

வித்தியாசமாகவும், சத்தானதாகவும் இருக்கும் பாசிப்பயிறு மசால் செய்து ருசி பாருங்க .

பாசிப்பருப்பு மசால்
பாசிப்பருப்பு மசால்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பாசிப்பயிறு

வெங்காயம்

தக்காளி

இஞ்சி

பூண்டு

கொத்தமல்லி

சீரகம்

சோம்பு

மிளகாய் தூள்

மல்லித்தூள்

கரம் மசால் துஹள்

மஞ்சள் தூள்

கடுகு உளுந்து

பெருங்காயம்

எண்ணெய்

உப்பு

செய்முறை முதலில் ஒரு கப் பாசிப்பயிறை 5 முதல் 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். நீரை வடித்து துணியில் முறை கட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் முளை கட்டிய பாசிப்பயிரை ஒரு குக்கரில் சேர்த்து அதில் 2 பெரிய வெங்காயம், 2 தக்காளியை சேர்த்து வேகவைக்க வேண்டும். 

5 விசிட் விட்டு எடுத்து கொண்ட பிறகு வேக வைத்த தக்காளி வெங்காயத்தை மட்டும் தனியாக ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு கொஞ்சம் சீரகம், ஒரு துண்டு இஞ்சி, 10 பல் பூண்டு, ஒரு கைபிடி கொத்தமல்லியை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதையடுத்து வாணிலியில் எண்ணெய் விட்டு அதில் கொஞ்சம் சோம்பு, கடுகு உளுந்து சேர்த்து கொள்ள வேண்டும். பொரிந்த உடன் அதில் அரைத்து எடுத்த விழுதை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் அதில் 2 ஸ்பூன் மல்லி தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, கால் ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

இப்போது வேக வைத்த முளை கட்டிய பாசிப்பயிறை சேர்க்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். இதையடுத்து குழம்பு கெட்டியாக மாறும் போது. ஒரு தாளிப்பு கரண்டியில் கொஞ்சமாக நெய் அல்லது எண்ணெய் எடுத்து நன்றாக சூடாக்கி கொள்ள வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் மிளகாய் பொடியை போட்டி பொரிய ஆரம்பித்த உடன் அதை குழம்பில் ஊற்றி ஒரு கொத்து மல்லி இழைகளை தூவி இறக்கி விட வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான முளைகட்டிய பச்சை பயிறு மசால் ரெடி. சூடான சாதம், சப்பாத்தி, தோசைக்கு அருமையான காமினேஷன்

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்