Paruppu Urundai Kulambu : பாரம்பரிய சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்க.. டேஸ்டில் கறிக்குழம்பு தோத்துடும்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Paruppu Urundai Kulambu : பாரம்பரிய சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்க.. டேஸ்டில் கறிக்குழம்பு தோத்துடும்

Paruppu Urundai Kulambu : பாரம்பரிய சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்க.. டேஸ்டில் கறிக்குழம்பு தோத்துடும்

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 31, 2024 10:01 AM IST

Paruppu Urundai Kulambu : பருப்பு உருண்டை குழம்பில் புரதச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இங்கு பாரம்பரிய முறைப்படி பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை செய்து பாருங்கள் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்

Paruppu Urundai Kulambu : பாரம்பரிய சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்க..  டேஸ்டில் கறிக்குழம்பு தோத்துடும்
Paruppu Urundai Kulambu : பாரம்பரிய சுவையில் பருப்பு உருண்டை குழம்பு செய்து பாருங்க.. டேஸ்டில் கறிக்குழம்பு தோத்துடும்

தேவையான பொருட்கள்

கடலை பருப்பு - 200 கிராம்

வர மிளகாய் - 15 காய்ந்த மிளகாய்

சோம்பு - 2 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

கடலை எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - 1 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு - 1ஸ்பூன்

வெந்தயம் -1/2 ஸ்பூன்

பூண்டு - 10 பல்

சின்ன வெங்காயம் - 100 கிராம்

பெரிய வெங்காயம் 2

தக்காளி - 1

பச்சை மிளகாய்- 2

பெருங்காயம் - ½ ஸ்பூன்

புளி - 75 கிராம்

தேங்காய் அரை முடி

உப்பு

மஞ்சள் தூள் - ½ ஸ்பூண்

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்

கறிவேப்பிலை - ஒரு கொத்து

பருப்பு உருண்டை குழம்பு செய்முறை

200 கிராம் கடலை பருப்பை சுத்தம் செய்து அதில் 10 வர மிளகாய், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அரை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

அதில் இரண்டு பெரிய வெங்காயம் வெங்காயத்தை நைசாக வெட்டி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் இரண்டு பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது அரைத்த பருப்பு வெங்காயம் அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு அதை உருண்டை பிடித்து இட்லி தட்டில் வைத்து 5 நிமிடம் வேக வைத்து எடுத்து ஆற விட வேண்டும்.

அதே போல் தேங்காய், சோம்பு , சீரகம் , 10 சின்ன வெங்காயத்தை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

ஒரு கடாயை சூடாக்கி அதில் 4 ஸ்பூன் கடலை எண்ணெய்யை ஊற்ற வேண்டும். அதில் வெந்தயம், கடுகு உளுந்தம்பருப்பு , 5 காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர். 10 பல் பூண்டை தட்டி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து சிவக்கும் வரை வதக்க வேண்டும். அரை ஸ்பூன் பெருங்காய தூளையும் சேர்க்க வேண்டும். வெங்காயம் சிவந்து வந்த பிறகு அதில் ஒரு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் 2 முதல் 3 ஸ்பூன் வரை காரத்திற்கு ஏற்ப குழம்பு மிளகாய் தூளையும் அரை ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் ஊற வைத்து கரைத்து எடுத்த புளி தண்ணீரையும் சேர்த்து கொள்ள வேண்டும்.

புளி , மசால் பச்சை வாடை போன பிறகு அரைத்து எடுத்த தேங்காய் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். தேங்காய் பச்சை வாடை போன பிறகு அதில் வேக வைத்து எடுத்த பருப்பு உருண்டையை சேர்க்க வேண்டும். பருப்பு உருண்டை சேர்த்து குழம்பு கொதிக்க ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும். உருண்டை போட்ட பிறகு அடிக்கடி கரண்டி போட்டு கிண்டுவதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பு : குழம்பில் பருப்பு உருண்ட சேர்க்கும் முன் விருப்பம் உடையவர்கள் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்க்கலாம். இது குழம்பின் ருசியை அதிகரிக்க உதவும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.