Parenting Tips: பெற்றோர்களே.. முதலில் மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பேசுங்கள்!-parents first talk to children about menstruation - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Parenting Tips: பெற்றோர்களே.. முதலில் மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பேசுங்கள்!

Parenting Tips: பெற்றோர்களே.. முதலில் மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பேசுங்கள்!

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 15, 2024 11:56 AM IST

Menstruation: பொதுவாக மற்ற எல்லா விஷயங்களையும் இன்றைய பெற்றோர்கள் எந்த தயக்கமும் இல்லாமல் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். இருப்பினும், பெண்களின் மாதவிடாய் என்று வரும்போது, ​​​​கொஞ்சம் பின்வாங்குகிறார்கள். இது தவறு.

பெற்றோர்களே.. முதலில் மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பேசுங்கள்!
பெற்றோர்களே.. முதலில் மாதவிடாய் குறித்து குழந்தைகளிடம் பேசுங்கள்! (Pixabay)

மாதவிடாய் உள்ளிட்ட தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி குழந்தைகளிடம் பேசுவதில் பெற்றோர்கள் சிரமப்படுவார்கள். ஆனால் குழந்தைகளுக்கு சரியான மற்றும் நம்பகமான தகவல்களை வழங்க வேண்டும். அது பெற்றோரின் பொறுப்பு. குழந்தைகள் தங்கள் உடலைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பெற்றோர்கள் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு உதவுவதோடு உடல்நலம் குறித்து சிறந்த முடிவுகளை எடுக்க உதவுங்கள்.

மாதவிடாய் பற்றி குழந்தைகளிடம் எப்போது பேச வேண்டுமா?

ஒரு குறிப்பிட்ட வயதில் மாதவிடாய் பற்றி பேசுவது பெரிய விவாதமாக இருக்கக்கூடாது. மாறாக, குழந்தைகளிடம் விஷயத்தைப் பற்றி கொஞ்சம் வேகமாகப் பேசுங்கள். உங்கள் குழந்தையின் புரிதலை மெதுவாக அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். இந்த தலைப்பை பெண்களிடம் மட்டுமே பேச வேண்டும், ஆண்களிடம் பேசக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்து முதலில் விடுபடுங்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எல்லா குழந்தைகளுக்கும் மாதவிடாய் பற்றிய நம்பகமான தகவல்கள் தேவை. எனவே உங்கள் குழந்தைகளுடன் பேசுவது அவசியம்.

குழந்தைகள் கேள்விகள் கேட்கும் போது பொறுமையாக சரியாக பதில் சொல்லுங்கள்

ஒரு 5 வயது குழந்தை டாம்பான்ஸ் அல்லது சானிட்டரி பேடைப் பார்த்தால், அது என்ன என்று கேள்வி எழுப்புகிறான். அந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று பாருங்கள். குழந்தைகள் கேள்வி கேட்கும் போது, ​​“இதெல்லாம் உனக்கு வேண்டாம். கேட்கக் கூடாது என்று பதில் சொல்லவதை தவிர்க்க வேண்டும். 

மாறாக “பெண்களுக்கு மாதந்தோறும் சிறிதளவு பிறப்புறுப்பு இரத்தப்போக்கு ஏற்படுகிறது. இது மாதவிடாய்  என்று அழைக்கப்படுகிறது. எந்த காயத்தினாலும் ரத்தப்போக்கு ஏற்படாது. இது ஒரு இயற்கையான செயல். மேலும் இது அவர்களின் உடல் ஒரு குழந்தைக்கு தயாராகும் நிலை. ஒரு டாம்பான்ஸ் இந்த இரத்தப்போக்கை உள்வாங்குகிறது. அப்போது உள்ளாடையில் ரத்தம் படாது” என்று சொல்லலாம். எனவே குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பதில் அளிக்கலாம். உங்கள் குழந்தை ஆணா பெண்ணா என்ற அடிப்படையில் பதில் அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்கள் குழந்தை அதைப் பற்றி கேள்வி கேட்கவில்லை என்றால், நீங்களே அதைக் கொண்டு வந்து மாதவிடாய் பற்றி அவர்களிடம் சொல்லலாம். 6 முதல் 7 வயதை அடையும் போது, ​​பெரும்பாலான குழந்தைகள் மாதவிடாய் காலத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள முடியும். அதைப் பற்றி பேசுவதற்கான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே சரியான தருணம்

குழந்தைகள் பருவம் அடையும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி அவர்கள் கேட்கும்போது அல்லது சொல்லாம்.

நீங்கள் குழந்தைகளுடன் பேடுகள் அல்லது டம்பான்களை வாங்கும்போது கேட்டால் சொல்லாம்.

மாதவிடாய் பற்றி வேறு யாரோ பேசுவதைக் கேட்டு குழந்தைகள் குழப்பமடையலாம்.

அப்போது உங்கள் பிள்ளைக்கு மாதவிடாய் பற்றி தெரியுமா என்று கேளுங்கள். பிறகு விரிவாகச் சொல்லலாம். 

ஒரு பெண் வளர வளர அவளது உடல் மாறுகிறது. அவள் வளரும்போது, ​​அவள் கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கலாம். அந்த குழந்தைக்கு தாயின் உடலுக்குள் வளர இடம் தேவை. 

குழந்தை வளரும் இடம் கருப்பை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் கருப்பை குழந்தைக்குத் தயாராகிறது. ஆரம்பத்தில், கருப்பையில் குழந்தை இல்லை என்றால், கருப்பையில் இருந்து சிறிது இரத்தம் வரும். அந்த ரத்தம் பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக வெளியேறுகிறது. என்று தெளிவாக சொல்லி கொடுக்க வேண்டும். 

இதையெல்லாம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் தாராளமாகப் பேசினால், அவர்களின் புரிதலை அதிகரித்து, தேவையற்ற ஆர்வங்கள் உருவாகாமல் தடுக்கலாம்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.