தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pappada Thuvaiyal: பேச்சிலர்களுக்கு ஏற்ற பப்பட துவையல்.. குழம்பே வேண்டாம் போங்க!

Pappada Thuvaiyal: பேச்சிலர்களுக்கு ஏற்ற பப்பட துவையல்.. குழம்பே வேண்டாம் போங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Aug 19, 2023 12:19 PM IST

குழம்பு வைக்க எல்லாம் நேரம் எங்கே என்று கேட்பவர்களுக்கான ஒரு சிம்பிள் ரெசிபி தான் இந்த பப்பட துவையல்

பட்பட துவையல்
பட்பட துவையல்

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பப்படம்

தேங்காய்

வரமிளாகாய்

சின்ன வெங்காயம்

மிளகாய் துள்

கறிவேப்பிலை

பூண்டு

உப்பு

எண்ணெய்

புளி

செய்முறை

முதலில் ஒரு 6 பப்படத்தை எண்ணெய் விட்டு பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 3 மிளகாய் வத்தலை நன்றாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் பொரித்து எடுத்த பப்படத்தை உடைத்து சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் 10 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அரை முடி துருவி எடுத்த தேங்காயை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் காரத்திற்கு ஏற்ப கொஞ்சம் மிளகாய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும். இரண்டு கொத்து கறிவேப்பிலை, குட்டி நெல்லிக்காய் அளவு புளி சேர்த்து கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்படி அரைத்து எடுத்த துவையலை சூடான சாதத்தில் பிரட்டி சாப்பிடலாம் ருசி அட்டகாசமாக இருக்கும். மேலும் தயிர் சாதம் ரசம் சாதம், சாம்பார் சாதத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். உடனே ட்ரை பண்ணி பாருங்க. அதிக பட்சம் 10 நிமிடம்தான் ஆரோக்கியமான வீட்டு உணவு ரெடி

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்