தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Papaya Seeds Benefits : குடலில் உள்ள புழுக்களை நீக்குவது முதல் நோய் எதிர்ப்பை அதிகரிப்பது வரை பப்பாளி விதையின் நன்மைகள்!

Papaya Seeds Benefits : குடலில் உள்ள புழுக்களை நீக்குவது முதல் நோய் எதிர்ப்பை அதிகரிப்பது வரை பப்பாளி விதையின் நன்மைகள்!

Priyadarshini R HT Tamil
May 11, 2024 11:21 AM IST

Benefits of Papaya Seeds : பப்பாளி மற்றும் பப்பாளிக்காயில் உள்ளதைப் போல் பப்பாளி விதைகளும் நன்மைகள் நிறைந்தவை. இவை மிளகின் சுவை மற்றும் கசப்பு சுவையில் இருக்கும். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை சரியான முறையில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

Papaya Seeds Benefits : குடலில் உள்ள புழுக்களை நீக்குவது முதல் நோய் எதிர்ப்பை அதிகரிப்பது வரை பப்பாளி விதையின் நன்மைகள்!
Papaya Seeds Benefits : குடலில் உள்ள புழுக்களை நீக்குவது முதல் நோய் எதிர்ப்பை அதிகரிப்பது வரை பப்பாளி விதையின் நன்மைகள்!

ட்ரெண்டிங் செய்திகள்

பப்பாளி விதைகளின் நன்மைகள்

செரிமானத்தை அதிகரிக்கிறது

பப்பாளி விதைகளில் பப்பைன் என்ற எண்சைம்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. சாப்பிடவுடன் ஒரு ஸ்பூன் பப்பாளி விதைகளை சாப்பிடுவது, செரிமான ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. செரிமானக் கோளாறுகளான வயிறு உப்புசம், மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறு ஆகியவற்றை தடுக்கிறது.

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

பப்பாளி விதைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. பப்பாளி விதைகளில் உள்ள உட்பொருட்கள், கல்லீரலை சுத்தமாக்குகிறது. 

ஒரு ஸ்பூன் பப்பாளி விதைகளை பொடித்து, ஒரு டம்ளர் பழச்சாறு அல்லது தண்ணீரில் கலந்து பருகவேண்டும். இதை சில வாரங்கள் தினமும் ஒருமுறை பருகினால் கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது

பப்பாளி விதையில் உள்ள ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் ஃபினோலிக் உட்பொருட்கள், வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது ஆர்த்ரிட்டிஸ் போன்ற வீக்கம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து ஆறுதல் அளிக்கிறது. சாலட்கள், ஸ்மூத்திகள் அல்லது யோகர்ட்களில் கலந்து சாப்பிடலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

பப்பாளி விதைகளில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உறுதிப்படுத்துகிறது. மேலும் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமம், தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள், உங்களுக்கு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது. 

இது உடல் எடையை பராமரிக்கும். இந்த விதைகள் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. எனவே இதை நேரடியாகவோ அல்லது உணவுடன் சேர்த்தோ சாப்பிடவேண்டும்.

புழுக்களை வெளியேற்றும்

பப்பாளி விதைகளில் புழுக்களுக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்ற உதவுகிறது. விதைகளை பொடித்து தேன் அல்லது யோகர்ட்டில் கலந்து சாப்பிடவேண்டும். 

இதை வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட்டால், இது நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றுகிறது.

புற்றுநோய்க்கு எதிரான குணங்கள்

பப்பாளி விதைகளில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளது. இது சில வகை புற்றுநோய்களின் வளர்ச்சியை தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

இதில் இதயத்துக்கு உதவக்கூடிய மோனோசேச்சுரேடட் கொழுப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பு அளவை குறைத்து, இதய நோய் ஆபத்தை தடுக்கிறது.

குறிப்புகள்

மிதமான அளவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்மாக அதிகரிக்கவேண்டும். அப்போதுதான் திடீர் விளைவுகள் தவிர்க்கப்படும். உங்களுக்கு ஏதேனும் வியாதிகள் இருந்தாலோ அல்லது குறிப்பிட்ட மருந்துகள் எடுத்தாலோ உங்கள் மருத்துவரின் அறிவுரையின்பேரில் எடுத்துக்கொள்ளலாம்.

இதை அதிகப்படியாக சாப்பிட்டால், இதில் பூஞ்ஜைக்கு எதிரான குணங்கள் உள்ளது. அது உடலில் பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் சில மருத்துவ பிரச்னைகள் உள்ளவர்கள் உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் இதை எடுத்துக்கொள்ள வேண்டும்.

WhatsApp channel

டாபிக்ஸ்