Paneer Masala : பன்னீர் மசாலா! இப்டி செஞ்சா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்!
Paneer Masala : பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.

தேவையான பொருட்கள்
பன்னீர் – 400 கிராம்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
மிளகு – சிறிதளவு
ஏலக்காய் – 1
கருப்பு ஏலக்காய் – 1
கிராம்பு – 2
சீரகம் – அரை ஸ்பூன்
பிரியாணி இலை – 1
பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
தக்காளி – 5 (துருவியது)
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காஷ்மீரி மிளகாய் தூள் – 3 ஸ்பூன்
மல்லித் தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத் தூள் – ஒரு ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்
சர்க்கரை – அரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
கசூரி மேத்தி – சிறிதளவு
செய்முறை -
கடாயில் நெய், எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலக்காய், மிளகு, கருப்பு ஏலக்காய், கிராம்பு, சீரகம், பிரியாணி இலை சேர்க்கவேண்டும்.
பின்னர் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும்.
பின் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.
துருவிய தக்காளி சேர்த்து 5 நிமிடம் வதக்கவேண்டும்.
பின் மஞ்சள் தூள், உப்பு, கஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவேண்டும்.
பிறகு கடலை மாவு சேர்த்து வதக்கவேண்டும்.
அடுத்து தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிடவேண்டும்.
பின்னர் நறுக்கிய பன்னீர் சேர்த்து கலந்து விடவேண்டும்.
பின் கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவேண்டும்.
கடைசியாக கசூரி மேத்தி சேர்த்து கலந்து இறக்கவேண்டும்.
தபா ஸ்டைல் பன்னீர் மசாலா தயார்.
சப்பாத்தி, ரொட்டி, நாண், குல்சா, ஃபுல்கா என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பன்னீரின் நன்மைகள்
100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது.
செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது.
பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது.
பன்னீர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளுள் ஒன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்