தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pain Relief Oil : மூட்டு, இடுப்பு, முதுகு வலியால் அவதியா? இதோ இந்த எண்ணெயை வீட்டிலே தயாரிக்கலாம்!

Pain Relief Oil : மூட்டு, இடுப்பு, முதுகு வலியால் அவதியா? இதோ இந்த எண்ணெயை வீட்டிலே தயாரிக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Feb 19, 2024 01:07 PM IST

Pain Relief Oil : மூட்டு, இடுப்பு, முதுகு வலியால் அவதியா? இதோ இந்த எண்ணெயை வீட்டிலே தயாரிக்கலாம்!

Pain Relief Oil : மூட்டு, இடுப்பு, முதுகு வலியால் அவதியா? இதோ இந்த எண்ணெயை வீட்டிலே தயாரிக்கலாம்!
Pain Relief Oil : மூட்டு, இடுப்பு, முதுகு வலியால் அவதியா? இதோ இந்த எண்ணெயை வீட்டிலே தயாரிக்கலாம்!

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

கடுகு எண்ணெய் – கால் லிட்டர்

வலியை நீக்கக்கூடியது

பூண்டு – 10 பல் (தோல் நீக்கி நசுக்கியது)

பச்சை கற்பூரம் – கால் ஸ்பூன் (பொடித்தது)

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் பூண்டு, பச்சை கற்பூரம் என அனைத்தையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். அடுப்பை குறைவான தீயில் வைத்து அவற்றின் சாறு இறங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.

பூண்டு சிவந்து வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு ஆறவிடவேண்டும். பின்னர் இதை ஒரு ஈரமில்லாத டப்பாவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் வலி ஏற்படும் நேரங்களில் அந்த இடங்களில் சிறிது சூடு செய்து தடவவேண்டும். 10 நாட்கள் வரைதான் பயன்படுத்த வேண்டும்.

கடுகு எண்ணெயின் நன்மைகள்

கடுகில் இருந்து பிழிந்து எடுக்கப்படுவது கடுகு எண்ணெய், இது வட இந்தியாவில் சமையல் உள்ளிட்ட அனைத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் உடலுக்கு பல்வேறு நன்மைகள் உள்ளன. கடுகு எண்ணெயில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை அளவுக்கு அதிகமும் பயன்படுத்தக்கூடாது.

இதய ஆரோக்கியம்

கடுகு எண்ணெயில் மோனோ அன்சாச்சுரேடட் மற்றும் பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் உள்ளது. இவையனைத்தும் இதயத்துக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் கொழுப்புளாகும். இவை உடலில் கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புக்களை அதிகரிக்க உதவுகிறது. அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

அலர்ஜிக்கு எதிரான குணம்

கடுகு எண்ணெயில் ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள செலினியம் அலர்ஜிக்கு எதிராக போராடும் தன்மைகொண்டவை. இவை உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அலர்ஜியை குறைக்க உதவுகிறது. அலர்ஜி அறிகுறிகளையும் போக்குகிறது.

சரும பராமரிப்பு

கடுகு எண்ணெய் சருமத்தில் தேய்த்து மசாஜ் செய்வதற்கு உதவுகிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது வறண்ட மற்றும் வெடித்த சருமத்தை சரிசெய்கிறது. இதில் வைட்டமின் இ சத்துக்கள் உள்ளது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சருமத்துக்கு ஊட்டமளிக்கிறது.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

கடுகு எண்ணெயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் இ, செலினியம், உடலில் ஃப்ரி ரேடிக்கல்களை ஒழுங்குபடுத்துகிறது. ஃப்ரி ரேடிக்கல்ஸ் என்பவை, செல்களை தேசப்படுத்தும், நிலையற்ற மூலக்கூறுகளாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செல்களுக்கு ஏற்படும் இந்த சேதத்தை தடுக்கிறது.

சுவாச உறுப்புகளின் ஆரோக்கியம்

பாரம்பரிய மருத்துவத்தில், கடுகு எண்ணெய், சுவாச பிரச்னைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இது சுவாசப்பாதைகளை சுத்தம் செய்ய உதவும் என்று நம்பப்படுகிறது. இதில் ரத்தகசிவை நீக்கக்கூடிய உட்பொருட்கள் உள்ளது. கடுகு எண்ணெய் ஆவியில் ஆவி பிடித்தால் மூக்கடைப்புகள் குணமாகும். சுவாசத்தை மேம்படுத்தும்.

தசை மற்றும் மூட்டு வலி

கடுகு எண்ணெயி பராம்பரிய உடல் மசாஜ்க்கு பயன்படுத்தப்படுகிறது. இது உடலில் உள்ள மூட்டு மற்றும் தசைகளில் வலிகளை போக்கும் தன்மை கொண்டது. இதன் சூடான தன்மை மற்றும் அலர்ஜிக்கு எதிரான குணங்கள், உடலை அமைதிப்படுத்தி, அசௌகர்யங்களை போக்குகிறது.

பாக்டீரியாக்களுக்கு எதிரான மற்றும் பூஜ்ஜைக்கு எதிரான குணம்

கடுகு எண்ணெயில் பாக்டீரியா மற்றும் பூஞ்ஜைகளுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது உங்கள் உடல் மற்றும் சருமத்தை சில தொற்றுகளில் இருந்து பாதுகாக்கும். சரும தொற்றுகள் மற்றும் காயங்களை போக்க பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

தலைமுடி பராமரிப்பு

கடுகு எண்ணெயில், அதிகளவில் வைட்டமின்கள் மினரல்கள் மற்றும் ஃபேட்டி ஆசிட்கள் உள்ளன. இவை தலைமுடி வளர்ச்சிக்கு உதவும். கடுகு எண்ணெயை தலைமுடியில் வேர்களில் மசாஜ் செய்யவேண்டும். அது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தலைமுடியை வலுவாக்குகிறது, தலைமுடி உதிர்வை குறைக்கிறது. இது பொடுகையும் கட்டுப்ழுடுத்த உதவுகிறது.

உடலுக்கு இத்தனை நன்மைகளை கொடுத்தாலும், சிலருக்கு பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். இதை பயன்படுத்துவதற்கு முன் சுகாதார நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது. குறிப்பாக ஏற்கனவே பல்வேறு உபாதைகளால் அவதிப்படுபவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்