தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Orange Rice : எலுமிச்சை சாதம் சாப்பிட்டு இருப்பீர்கள் – ஆரஞ்சு சாதம் செஞ்சு இருக்கீங்களா?

Orange Rice : எலுமிச்சை சாதம் சாப்பிட்டு இருப்பீர்கள் – ஆரஞ்சு சாதம் செஞ்சு இருக்கீங்களா?

Priyadarshini R HT Tamil
Aug 05, 2023 12:42 PM IST

Orange Rice : ஆரஞ்சு சாப்பிடுவது கண் பார்வைத்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த அழுத்ததை சீராக்கிறது. சிறுநீரக கற்கள், சிறுநீராக தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூட்டு வலி, சரும பாதுகாப்பு, விந்தணுக்கள் அதிகரிக்க உதவுகிறது.

ஆரஞ்சு சாதம்
ஆரஞ்சு சாதம்

ட்ரெண்டிங் செய்திகள்

கொழுப்பு கட்டுக்குள் இருப்பதால், உடல் எடையை குறைக்கவும், ஆரஞ்சு பழம் உதவுகிறது. இதயத்தை பாதுகாத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதய துடிப்பை சீராக்குகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள வைட்டமின் – சி சத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஆரஞ்சில் உள்ள பாலிஃபினால் வைரஸ் நோய்களை தடுக்க உதவுகிறது. ஆரஞ்சில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

ஆரஞ்சு சாப்பிடுவது கண் பார்வைத்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த அழுத்ததை சீராக்கிறது. சிறுநீரக கற்கள், சிறுநீராக தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. மூட்டு வலி, சரும பாதுகாப்பு, விந்தணுக்கள் அதிகரிக்க உதவுகிறது.

தேவையான பொருட்கள் –

அரசி – 2 கப்

ஆரஞ்சு பழம் – 1

கடுகு – கால் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – அரை ஸ்பூன்

வர மிளகாய் – 4

கறிவேப்பிலை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

கடலை – ஒரு கைப்பிடி (எண்ணெயில் வறுத்தது)

முந்திரி – 10 (நெய்யில் வறுத்தது)

செய்முறை -

பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி என எது வேண்டுமானாலும், எடுத்து அலசி சாதமாக வடித்து எடுத்து வைத்துக்கொக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சை பிழிந்து, வடித்து சாறு எடுத்துக்கொண்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ஆகியவை தாளித்து, அனைத்து சிவந்து வந்தவுடன், கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்க்க வேண்டும்.

பின்னர் ஆரஞ்சு கலவையை அதில் ஊற்றி சூடானதும் அடுப்பை அணைத்து விடவும்.

சாதத்தை நன்றாக ஒரு அகல பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி ஆற வைக்க வேண்டும்.

ஆறிய சாதத்தில் இந்த ஆரஞ்சு சாறை ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.

பின்னர் அதில் வறுத்த கடலை, முந்திரி சேர்த்து நன்றாக கிளற வேண்டும். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம்.

ஊறுகாய் அல்லது தேங்காய் துவையலோடு பரிமாற வேற லெவல் சுவையில் இருக்கும்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்