Pearl Millet Dhal Rice : அரிசீம்பருப்புக்கு டஃப் கொடுக்கும் கம்பு பருப்பு சோறு! இப்டி செஞ்சு அசத்துங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pearl Millet Dhal Rice : அரிசீம்பருப்புக்கு டஃப் கொடுக்கும் கம்பு பருப்பு சோறு! இப்டி செஞ்சு அசத்துங்க!

Pearl Millet Dhal Rice : அரிசீம்பருப்புக்கு டஃப் கொடுக்கும் கம்பு பருப்பு சோறு! இப்டி செஞ்சு அசத்துங்க!

Priyadarshini R HT Tamil
Published Mar 02, 2024 10:18 AM IST

Pearl Millet Dhal Rice : அரிசீம்பருப்புக்கு டஃப் கொடுக்கும் கம்பு பருப்பு சோறு! இப்டி செஞ்சு அசத்துங்க!

Pearl Millet Dhal Rice : அரிசீம்பருப்புக்கு டஃப் கொடுக்கும் கம்பு பருப்பு சோறு! இப்டி செஞ்சு அசத்துங்க!
Pearl Millet Dhal Rice : அரிசீம்பருப்புக்கு டஃப் கொடுக்கும் கம்பு பருப்பு சோறு! இப்டி செஞ்சு அசத்துங்க!

துவரம்பருப்பு - அரை கப்

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வறுத்த வேர்க்கடலை – 2 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

புளியை ஊறவைத்துக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்

குக்கரில் கம்பு, துவரம்பருப்பு சேர்த்து, மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி 4 விசில்விட்டு இறக்கவேண்டும்.

கடாயில், தேங்காய் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வேர்க்கடலை தாளிக்கவேண்டும்.

அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் வேகவைத்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவேண்டும்.

கம்பில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.

கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.

சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.

அல்சர் மற்றும் அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.

சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்தை வழங்குகிறது – சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது. இதை ராஜ்மா, பாசிபருப்பு, கொண்டடைக்கடலை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.

கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.

உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.

குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.