Ivy Guard - Onion Poriyal : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் கோவக்காய் - வெங்காயம் பொரியல்! இப்டி செஞ்சு பாருங்க!-ivy guard onion poriyal again and again ivy guard onion poriyal check it out now - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Ivy Guard - Onion Poriyal : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் கோவக்காய் - வெங்காயம் பொரியல்! இப்டி செஞ்சு பாருங்க!

Ivy Guard - Onion Poriyal : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் கோவக்காய் - வெங்காயம் பொரியல்! இப்டி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Mar 02, 2024 04:36 PM IST

Ivy Guard - Onion Poriyal : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் கோவக்காய் - வெங்காயம் பொரியல்! இப்டி செஞ்சு பாருங்க!

Ivy Guard - Onion Poriyal : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் கோவக்காய் - வெங்காயம் பொரியல்! இப்டி செஞ்சு பாருங்க!
Ivy Guard - Onion Poriyal : மீண்டும், மீண்டும் சுவைக்க தூண்டும் கோவக்காய் - வெங்காயம் பொரியல்! இப்டி செஞ்சு பாருங்க!

பெரிய வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

தேங்காய் துருவல் – கால் கப்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு – ஒரு ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோவக்காயை கழுவிவிட்டு, இருமுனைகளையும் நறுக்கிவிட்டு, வட்ட வடிவமாக வெட்டிக்கொள்ள வேண்டும். இன்னும் சிறியதாக வேண்டுமானாலும் நறுக்கிக்கொள்ளலாம்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன், வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், கோவக்காய், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து வேகவிடவேண்டும்.

காய்கறிகள் வெந்தவுடன், துருவிய தேங்காய் சேர்த்து வதக்க வேண்டும். தண்ணீர் வற்றும்வரை வதக்க வேண்டும்.

கோவக்காயின் நன்மைகள்

கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நீரிழிவு நோயை குணப்படுத்த விரும்புகிறது. கோவைக்காய் மற்றும் கீரையை சூப்பில் சேர்த்து சாப்பிடலாம். இது குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது

இதில் உடல் பருமனுக்கு எதிரான உட்பொருட்கள் உள்ளது. இது கொழுப்பு செல்களாக ப்ரீஅடிபோசைட்டிஸ் மாறுவதை தடுக்கிறது. இதனால் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ரத்த சர்க்கரை அளவை குறிக்கிறது. இது இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

சோர்வை நீக்க உதவுகிறது

இரும்புச்சத்து உடல் இயங்குவதற்கு தேவையான ஒரு சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது உடலுக்கு சுறுசுறுப்பை வழங்குகிறது. சோர்வை நீக்குகிறது. உடலில் இரும்புச்சத்து குறைபாட்டால் அனீமியா ஏற்படுகிறது. கோவக்காயில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. எனவே இதை சாப்பிடும்போது கிடைக்கும் இரும்புச்சத்து உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும், ஆற்றல் நிறைந்தவர்களாகவும் வைத்திருக்க உதவுகிறது.

நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது

தர்ப்பூசணியைப்போல், கரையக்கூடிய பி 2 வைட்டமின் சத்து இதில் உள்ளது. இந்த வைட்டமின் உங்கள் உடலில் ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது. இதில் ஊட்டச்சத்துக்கள், மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது உங்கள் நரம்பு மண்டலம் வலுவடைய உதவுகிறது. கோவக்காய் வலிப்பு, அல்சைமர், சிவிரோசிஸ் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. காப்பர் டனல் சின்ரோம் என்ற கோளாறை வைட்டமின் பி6வுடன் சேர்ந்து சரிசெய்ய கோவக்காய் உதவுகிறது.

உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது

தியாமைன் என்ற ஊட்டச்சத்து, கார்போஹைட்ரேட்களை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது உங்கள் உடலின் ஆற்றல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது உடல் வளர்சிதை மாற்றத்தை முறைப்படுத்த உதவுகிறது. கோவக்காயில் உள்ள தியாமைன் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் புகுந்து அதிக சக்தியை வழங்குகிறது. இந்த ஊட்டச்சத்து ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது. இது மரபணு கோளாறுகளையும் சரிசெய்கிறது.

செரிமானத்தை அதிகரிக்கிறது

கோவக்காய் செரிமானத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை அதிகரிக்கிறது. கடினமான மலத்தை இலகுவாக்கி வெளியேற்ற உதவுகிறது. மலச்சிக்கல், அல்சர் போன்ற வயிறு தொடர்பான பல்வேறு சிக்கல்களையும் கேவக்காய் சரிசெய்கிறது.

சிறுநீரக கற்கள் போக உதவும் கோவக்காய்

சிறுநீரக கற்கள் என்பது கால்சியம் அல்லது மற்ற மினரல்கள் சிறுநீரக பாதையில் கற்களாக உருப்பெறுவது. உணவில் குறிப்பிட்ட அளவைவிட உப்பு அதிகரித்தால் அது சிறுநீரகத்தில் கற்களை ஏற்படுத்துகிறது. கோவக்காயில் உள்ள கால்சியம் கீரை போன்ற உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது, சிறுநீரக கற்களை போக்க உதவுகிறது.

நோய்களை குணப்படுத்துகிறது

கோவக்காய் நிறைய நோய்களை குணப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பல்வேறு நோய்களையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸை கொல்கிறது. இது காய்ச்சல், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, தொழுநோய் மற்றும் வயிறு தொடர்பான பிரச்னைகளை சரிசெய்கிறது. இதற்கு சரியான உணவை எடுத்துக்கொண்டு அதில் கோவக்காயையும் சில வாரங்கள் சேர்த்துக்கொண்டு பலன்பெறுங்கள்.

அலர்ஜியை எதிர்த்து போராட உதவுகிறது

கோவக்காயில் அதிகளவில் செப்போனின், அல்கலாய்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் கிளைக்கோசைட்கள் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள், உடலை அலர்ஜி மற்றும் அனஃபிலாக்டிக் பிரச்னைகளில் இருந்து உடலை காக்கிறது.

கோவக்காய் தொற்றுக்களை குணப்படுத்துகிறது

இதன் விதை, பழம் மற்றும் இலைகள் என அனைத்தையும் சேர்த்து அரைத்து சொறி சிரங்கு மற்றும் தொழுநோய்க்கு உபயோகிக்கலாம். இந்த நோய்களுக்கு இது இயற்கை மருத்துவம். பல்வேறு மருந்துகள் இருக்கும்போதும் இதுவும் உதவுகிறது. இது பாக்டீரியாக தொற்றுக்களுக்கு ஆன்டிபயோடிக்காகவும் பயன்படுகிறது.

புற்றுநோயை தடுக்கிறது

கோவக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அதிகளவு பீட்டா கரோட்டின் புற்றுநோயை தடுக்க உதவுகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் டியூமர் செல்கள் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது புற்றுநோய் செல்கள் பல்கிப்பெருகுவதை நிறுத்த உதவுகிறது. உங்கள் உணவில் கோவக்காய் சேர்த்துக்கொள்ளும்போது, அது புற்றுநோய் வாய்ப்புக்களை தடுக்கிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது

இதில் பொட்டாசிய சத்து அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தி, இதய நோயை தடுக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.