Onam Sadhya Recipes : ஓண சத்ய விருந்தில் இடம்பெறும் சிறப்பு உணவுகள் என்னவென்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Onam Sadhya Recipes : ஓண சத்ய விருந்தில் இடம்பெறும் சிறப்பு உணவுகள் என்னவென்று பாருங்கள்!

Onam Sadhya Recipes : ஓண சத்ய விருந்தில் இடம்பெறும் சிறப்பு உணவுகள் என்னவென்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Sep 14, 2024 02:40 PM IST

Onam Sadhya Recipes : ஓண சத்ய விருந்தில் இடம்பெறும் சிறப்பு உணவுகள் என்னவென்று பாருங்கள். இந்த ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவற்றை உண்டு மகிழுங்கள்.

Onam Sadhya Recipes : ஓண சத்ய விருந்தில் இடம்பெறும் சிறப்பு உணவுகள் என்னவென்று பாருங்கள்!
Onam Sadhya Recipes : ஓண சத்ய விருந்தில் இடம்பெறும் சிறப்பு உணவுகள் என்னவென்று பாருங்கள்!

அவியல்

அனைத்து காய்கறிகளையும் கொண்டு செய்யப்படும் அவியல், தயிர், தேங்காய் மசாலா அரைத்து பாரம்பரிய முறையில் செய்யப்படுவது. ஓண சத்யாவில் பரிமாறப்படும் முக்கியமான உணவுகளுள் ஒன்று. இது க்ரீமியாக இருக்கும். இது கேரளாவின் உணவு வகைகளுள் ஒன்று.

சாம்பார்

சாம்பார், காய்கறிகள், பருப்பு சேர்த்து செய்யப்படுவது. இது தென்னிந்தியாவின் பிரதான உணவு. இதுவும் ஓண சத்யாவின் ஒரு அங்கம். ஓணத்தன்று பரிமாறப்படும் உணவுகளுள் பிரதானமான ஒன்றாகும்.

பருப்பு கறி

பருப்புகள் காரமாக சமைக்கப்பட்டு, தேங்காய் மசாலா சேர்த்து செய்யப்படும் உணவு. இது பருப்பு சேர்த்து செய்யப்படுவதால், இதில் புரதச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். ஓண சத்யா விருந்தின் முக்கிய உணவாகும்.

ரசம்

தென்னிந்தியாவில் பரிமாறப்படும் பிரதான உணவு. குறிப்பாக செரிமானத்துக்காக பயன்படுத்தப்படும். மிளகு, சீரகம் என அனைத்தையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு உணவு ஆகும். இந்த ரசம் ஓணத்தன்று பலமான விருந்து எளிதில் செரிப்பதற்காக பரிமாறப்படுகிறது.

ஓலன்

தேங்காய் பால், பூசணிக்காய், கடலை ஆகியவை சேர்த்து செய்யப்பபடும் ஒரு உணவு வகை. இது இனிப்பானவும், க்ரீமியாகவும் தயாரிக்கப்படும். கேரள உணவில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

தோரன்

ஏதேனும் ஒரு காய் துருவிய தேங்காயுடன் சேர்த்து செய்யப்படும். இது சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஓணம் சத்யா விருந்துக்கு இது நல்ல ஒரு சுவையை வழங்கக்கூடியது. இதற்கு முட்டைகோஸ், பீன்ஸ், கேரட் போன்ற காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றன.

காலன்

தயிர், வாழைக்காய், தேங்காய் சேர்த்து செய்யப்படும் காலன் காரம் மற்றும் நல்ல சுவையை கொடுக்கிறது. இது ஓண விருந்துக்கு நல்ல ஒரு சுவையை வழங்குகிறது.

பச்சடி

தயிர், பச்சையாக சாப்பிடக்கூடிய காய்கறிகள் மற்றும் குறிப்பிட்ட பழங்கள் பயன்படுத்தி செய்யக்கூடிய உணவு. இதில் இனிப்பு சுவை, காரம், புளிப்பு, உப்பு ஆகிய அனைத்து சுவைகளும் கலந்தது. இது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கும் ஒரு உணவு வகையாகும்.

மாங்காய் ஊறுகாய்

மாங்காயை வைத்து செய்யப்படும் ஊறுகாய், இது சத்யா விருந்தில் மிக முக்கியமான அம்சமாகும். இது விருந்தின் சுவையை மேலும் அதிகரிக்கும்.

அப்பளம்

கரகர மொறுமொறு அப்பளம், ஓண விருந்தின் முக்கியமான ஒன்றாகும். குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவாகும். அப்பளம் உளுந்து அல்லது அரிசியில் செய்யப்படும் உணவாகும். பாயாசத்தின் ஜோடி.

வாழைக்காய் சிப்ஸ்

நேந்திரன் என்ற வாழைக்காயில் செய்யப்படுவது. நேந்திரன் வாழைக்காயை சீவி, தேஙகாய் எண்ணெயில் பொறித்து எடுத்தால் கிடைப்பது நேந்திரன் சிப்ஸ். இது கேரளாவில் மிக பிரபலமான உணவு

பாயாசம்

பாயாசம் இல்லாத ஒரு விருந்து இருக்க முடியுமா? அரிசி, வெல்லம், தேங்காய்பால் கொண்டு செய்யப்படுவது. பாயாசத்தில் பல வகை உண்டு. அனைத்தையும் உண்டு முடித்து பாயாசத்தை சாப்பிட்டால், சாப்பிட்ட அனைத்தும் செரித்துவிடும்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.