தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil
May 18, 2024 03:40 PM IST

Mango Aviyal : மாங்காய் சீசனில் மாங்காயை ஒரே மாதிரி சாப்பிட்டு போர் அடித்துவிட்டால், இந்த வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!

Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்!
Mango Aviyal : மாங்காயில் வித்யாசமான அவியல் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்! (yummy tummy aarthi)

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சை மிளகாய் – 2

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் – கால் கப் (துருவியது)

சீரகம் – ஒரு ஸ்பூன்

வர மிளகாய் – 4

பூண்டு – 4 பல்

சின்னவெங்காயம் – 10

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

ஒரு கடாயில் மாங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அரைக்க கொடுத்துள்ள தேங்காய், வர மிளகாய், பூண்டு, சீரகம் சேர்த்து நன்றாக அரைத்து அதில் சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்து கொதிக்கிவிடவேண்டும்.

பின்னர் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொரிந்தவுடன் குழம்பில் சேர்க்கவேண்டும்.

இதில் நீங்கள் விருப்பப்பட்டால், கடைசியாக தயிரை அடித்து கலந்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கலாம். தயிர் முற்றிலும் தேவைப்பட்டால் மட்டுமே சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும் இது சுவை நிறைந்ததாக இருக்கும்.

மாங்காய் துண்டுகளுடன் இரண்டே இரண்டு மாம்பழத்துண்டுகள் சேர்த்துக்கொண்டால் சுவை இன்னும் வித்யாசமாகவும், குழம்பு நல்ல கெட்டியாகவும் வரும்.

மாங்காயின் நன்மைகள்

உடல் எடையை குறைக்க மாங்காய் உதவும். அசிடிட்டி பிரச்னையை தீர்க்க உதவும். கர்ப்பிணிகளுக்கு, புளிப்பு சுவையை சாப்பிட சிலருக்கு தோன்றும். அப்போது மாங்காயை சாப்பிடலாம். அது அவர்களுக்கு கர்ப்ப காலத்தில் காலை நேரத்தில் ஏற்படும் சோர்வை தடுக்க உதவும்.

மாங்காயை சாப்பிடும்போது, அது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. இதனால் மாங்காயை மதிய உணவுக்குப்பின்னர் எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு ஆற்றலை வழங்கி, தூங்கி விழுவதிலிருந்து தப்பிக்க வைக்கும். மாங்காய் பித்தத்தை அதிகம் சுரக்கச்செய்கிறது.

இதனால், கல்லீரலுக்கு மாங்காய் நன்மை தரும் உணவு. குடலில் உள்ள தொற்றுகளை குணப்படுத்தவும் மாங்காய் உதவுகிறது. குடலை சுத்தம் செய்கிறது. மாங்காய் வெயில் காலத்தில்தான் அதிகம் கிடைக்கும்.

மாங்காயை அப்போது எடுத்துக்கொள்வது வெயிலால் ஏற்படும் வியர்குரு வராமல் தடுப்பதுடன், வெயிலால் ஏற்படும் அபாயங்களில் இருந்தும் நம்மை காக்கிறது. மாங்காயில் உள்ள வைட்டமின் சி ரத்த நாளங்களின் நீட்சித்தன்மையை அதிகரிக்கிறது.

அதனுடன், புதிய ரத்த அணுக்கள் உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது. மலச்சிக்கல் நீங்க மாங்காய் உதவுகிறது. உப்பு மற்றும் தேன் தொட்டு சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

மாங்காய் சாறு அருந்தினால் கோடை காலத்தில் வியர்வை மூலம் வெளியேறும் சோடியம் குளோரைட் மற்றும் இரும்புச்சத்து தடுக்கப்படுகிறது. தயிருடன் மாங்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

பல் பராமரிக்க உதவுகிறது. மாங்காயை கடித்து சாப்பிடுவதால் பற்கள் பலமடைகின்றன. ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவு தடுக்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் மற்றும் பல் சொத்தையாவது தடுக்கப்படுகிறது. உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

ஆனால் இவ்வளவு நன்மைகள் நிறைந்த மாங்காயை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது உடலில் சூட்டை ஏற்படுத்தும். அதனால் அதிகம் எடுத்துக்கொண்டால், வயிற்று வலி, வயிற்றில் உபாதைகளை ஏற்படுத்தும்.

WhatsApp channel

டாபிக்ஸ்