Uric Acid : எச்சரிக்கை மக்களே! இந்த காய்கறிகள் உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கிறது!

By Priyadarshini R
Aug 21, 2024

Hindustan Times
Tamil

கத்தரிக்காய் கத்தரிக்காயில் அதிகளவில் பியூரின்கள் உள்ளது. இது அதிக யூரிக் அமிலத்தால் ஏற்படும் வலிகளை அதிகரிக்கும்.

காளான் காளானில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம்தான். அதற்காக அதை அதிகம் எடுத்துக்கொண்டால் அது உங்கள் உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும்.

பச்சை பட்டாணி பட்டாணியிலும் பியூரின்கள் உள்ளன, இதை ஏற்கனவே உடலில் யூரிக் அமிலப் பிரச்னைகள் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டால், அதை அதிகரிக்கச் செய்யும்.

கீரை கீரையில் ஃபோலேட் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆனால், அதை அதிகம் உட்கொள்ளும்போது, அதில் உள்ள ப்யூரின்கள் யூரிக் அமிலத்தை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே ஏற்கனவே யூரிக் அமிலப் பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இந்த காய்கறிகளை எச்சரிக்கையுடன் சாப்பிடவேண்டும்.

ப்ராக்கோலி ப்ராக்கோலி, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்ததான், அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. என்றாலும், இதை அதிகம் எடுத்துக்கொண்டால் அது உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கச் செய்யும்.

கார்களி ஒளிந்து கொள்ளும் எலிகளை விரட்டுவதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்காரில் உள்ள எலிகளை விரட்ட எளிய வழி