Omelette Gravy : அசத்தல் சுவையில் ஆம்லேட் குழம்பு செய்வது எப்படி? வித்யாசமான முறையில் இப்டி செய்ங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Omelette Gravy : அசத்தல் சுவையில் ஆம்லேட் குழம்பு செய்வது எப்படி? வித்யாசமான முறையில் இப்டி செய்ங்க!

Omelette Gravy : அசத்தல் சுவையில் ஆம்லேட் குழம்பு செய்வது எப்படி? வித்யாசமான முறையில் இப்டி செய்ங்க!

Priyadarshini R HT Tamil
May 13, 2024 07:00 AM IST

Omelette Gravy : அசத்தல் சுவையில் ஆம்லேட் குழம்பு செய்வது எப்படி? வித்யாசமான முறையில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Omelette Gravy : அசத்தல் சுவையில் ஆம்லேட் குழம்பு செய்வது எப்படி? வித்யாசமான முறையில் இப்டி செய்ங்க!
Omelette Gravy : அசத்தல் சுவையில் ஆம்லேட் குழம்பு செய்வது எப்படி? வித்யாசமான முறையில் இப்டி செய்ங்க!

பாசிபருப்பு – ஒரு ஸ்பூன்

(ஊறவைத்து அரைத்துக்கொள்ள வேண்டும்)

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

குழம்பு மசாலாப் பொடி – ஒரு ஸ்பூன்

மஞ்சள் பொடி – கால் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – அரை கப்

சோம்பு – கால் ஸ்பூன்

கசகசா – கால் ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பட்டை – 1

கிராம்பு – 2

பிரியாணி இலை – 1

ஸ்டார் சோம்பு – 1

ஏலக்காய் – 1

செய்முறை

முட்டையை உடைத்து ஊற்றி, அதில் ஊறவைத்த பாசிபருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்க்க வேண்டும். பின்னர் அதை தோசைக்கல்லில் மொத்தமாக ஊற்றி இருபுறமும் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை சதுரமாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

(இதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்தும் ஆம்லேட்கள் செய்துகொள்ளலாம்)

தேங்காய் துருவல், சோம்பு, கசகசாவை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளித்தவுடன், கறிவேப்பிலை தூவி பொரிய விடவேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி பொன்னிறமானவுடன், தக்காளி சேர்த்து நல்ல குழைவாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்னர் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் மஞ்சள் தூள், உப்பு, குழம்பு மிளகாய் தூள் என அனைத்தும் சேர்த்து வதக்கவேண்டும்.

அதில் தேங்காய் மசாலாவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.

நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில் முட்டை ஆம்லேட்களை சேர்க்கவேண்டும்.

கடைசியான மல்லித்தழை தூவி இறக்கவேண்டும். சுவையான ஆம்லேட் குழம்பு தயார்.

இதை நீங்கள் சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம் அல்லது இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என டிஃபனுக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். பிரயாணிக்கும் சிறந்த சைட்டிஷ்ஷாக இந்த ஆம்லேட் குழம்பு இருக்கும்.

குறிப்புகள்

இந்த குழம்பை செய்து அந்த ஆம்லேட்டை குழம்பில் நன்றாக ஊறவிடவேண்டும். நீண்ட நேரம் ஊறினால்தான் ஆம்லேட் மிருதுவாக இருக்கும். உப்பு அளவாக சேர்க்கவேண்டும்.

பாசிபருப்புக்கு பதில் கடலை பருப்பும் ஊறவைத்து அரைத்து சேர்த்துக்கொள்ளலாம். அதிகளவில் செய்வதற்கு இரண்டு பருப்பையும் அளவாக சேர்த்து அரைத்துக்கொள்ளலாம்.

வேகவைத்த முட்டையை சேர்ப்பது அல்லது முட்டையை குழம்பில் உடைத்து நேராக ஊற்றி சேர்ப்பது என முட்டை குழம்புகளில் பலவகை உண்டு. இது மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் இந்தக் குழம்பை காய் சேர்த்தும் செய்யலாம். முருங்கைக்காய் அல்லது உருளைக்கிழங்கு இதற்கு பொருத்தமான காய்கறிகள்.

இரண்டு முட்டை வைத்து செய்யும் இந்தக்குழம்பை 6 பேருக்கு பரிமாற முடியும். வீட்டில் நபர்கள் அதிகம், முட்டை குறைவாக உள்ளது என்றால், இந்த முறையில் செய்யலாம்.

கூடவே காய் சேர்த்து செய்யும்போது, சுவையுடன், அதிகம் பேருக்கு பரிமாறவும் முடியும். இதுபோல் ஒருமுறை முட்டை குழம்பை செய்துபாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.