Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!-tomato rice saurashtra style tomato rice do this for a taste that excites the taste buds of the tongue - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!

Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!

Priyadarshini R HT Tamil
May 12, 2024 01:10 PM IST

Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!

Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!
Tomato Rice : சவுராஷ்ட்ரா ஸ்டைல் தக்காளி சாதம்! நாவின் சுவை அரும்புகளை தூண்டும் சுவைக்கு இப்படி செய்ங்க!

தேவையான பொருட்கள்

தக்காளி – 3

பச்சை மிளகாய் – 3

சின்ன வெங்காயம் – 10

பூண்டு – 8 பல்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

சாம்பார் பொடி – 2 ஸ்பூன்

வடித்த சாதம் – ஒரு கப்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

மல்லித்தழை – 2 கொத்து

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

செய்முறை

சின்னவெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகிய அனைத்தையும் உரலில் சேர்த்து இடித்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியில் சேர்த்து அரைத்தால் பல்ஸ் மோடில் ஒன்றிரண்டாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை ஒரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, அதில் தக்காளியை கைகளால் இதனுடன் சேர்த்து பிசைந்துகொள்ளவேண்டும்.

அதனுடன் உப்பு, மஞ்சள் தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். பின்னர் கைகளால் பிசைந்து வைத்துள்ள இந்த கலவையை அடுப்பில் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவேண்டும்.

தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீர் அதிகம் சேர்க்கக் கூடாது. சேர்த்தால் சாதத்தில் சுவை இருக்காது. தண்ணீரும் தெளித்துதான் விடவேண்டும். ஊற்றக்கூடாது.

எண்ணெய் பிரிந்து வரும் பதத்தில், அதில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறவேண்டும்.

கிளறினால், சுவையான தக்காளி சாதம் நிமிடத்தில் தயாராகிவிடும். எளிதான லன்ச் பாக்ஸ் ரெசிபி.

ஒரு பரபரபப்பான நாளில், சாதத்தை வடித்து இதுபோல் செய்துவிட்டு, தயிருக்கு கொஞ்சம் சாதம் எடுத்து வைத்துவிட்டு, ஏதேனும் சைட்டிஷ் வைத்து சாப்பிடலாம்.

குறிப்புகள்

சாம்பார் பொடிக்கு பதில், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

பச்சை மிளகாய் உங்கள் கார அளவுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளலாம்.

தாளிக்கும்போது தேவைப்பட்டால் முழு வர மிளகாயையும் சேர்த்துக்கொள்ளலாம். 

தக்காளியின் நன்மைகள்

தக்காளியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

தக்காயில் வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் கே ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளது.

இதன் நிறம் பெரும்பாலும் சிவப்பு. இது மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, பர்பிள் நிறங்களிலும் காணப்படுகிறது. இதன் சுவை மற்றும் வடிவங்களும் மாறுபடுகிறது.

100 கிராம் தக்காளியில் 18 கலோரிகள் உள்ளன. 95 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது. புரதம் 0.9 கிராம், கார்போஹைட்ரேட் 3.9 கிராம், சர்க்கரை 2.6 கிராம், நார்ச்சத்து 1.2 கிராம் மற்றும் கொழுப்பு 0.2 கிராம் உள்ளது. இவை தவிர இதில் குளுக்கோஸ், ஃப்ரூட்டோஸ் ஆகிய சத்துக்களும் உள்ளன.

தக்காளியில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

ஒரு தக்காளி நாளைக்கு தேவையான அளவில் 28 சதவீதம் வைட்டமின் சியை வழங்குகிறது. இதில் உள்ள பொட்டசியம், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

இத்தனை சத்துக்கள் நிறைந்த தக்காளியை நாம் பல்வேறு உணவுகளில் சேர்த்து செய்கிறோம். இதுபோல் சட்னியான அரைத்து சாப்பிடும்போது கூடுதலான சுவை கிடைக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.