Nuts Laddu : மூளையை சுறுசுறுப்பாக்க; ஞாபக சக்தியை அதிகரிக்க; ரத்தத்தை சுரக்க வைக்க தினமும் 2 லட்டு போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nuts Laddu : மூளையை சுறுசுறுப்பாக்க; ஞாபக சக்தியை அதிகரிக்க; ரத்தத்தை சுரக்க வைக்க தினமும் 2 லட்டு போதும்!

Nuts Laddu : மூளையை சுறுசுறுப்பாக்க; ஞாபக சக்தியை அதிகரிக்க; ரத்தத்தை சுரக்க வைக்க தினமும் 2 லட்டு போதும்!

Priyadarshini R HT Tamil
Sep 10, 2024 12:46 PM IST

Nuts Laddu : மூளையை சுறுசுறுப்பாக்க; ஞாபக சக்தியை அதிகரிக்க; ரத்தத்தை சுரக்க வைக்க தினமும் 2 லட்டு போதும். அதை தயாரிப்பதும் சுலபம்தான். எப்படி என்று பாருங்கள்.

Nuts Laddu : மூளையை சுறுசுறுப்பாக்க; ஞாபக சக்தியை அதிகரிக்க; ரத்தத்தை சுரக்க வைக்க தினமும் 2 லட்டு போதும்!
Nuts Laddu : மூளையை சுறுசுறுப்பாக்க; ஞாபக சக்தியை அதிகரிக்க; ரத்தத்தை சுரக்க வைக்க தினமும் 2 லட்டு போதும்! (yummy tummy)

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை – 1 கப் (வறுத்துக்கொள்ளவேண்டும்)

பொட்டுக்கடலை – அரை கப் (வறுத்துக்கொள்ளவேண்டும்)

எள் – 2 ஸ்பூன்

தேங்காய் துருவல் – 4 ஸ்பூன்

நெய் – தேவையான அளவு

பேரிட்சைப்பழம் – 10 (விதைகளை நீக்கியது)

நாட்டுச்சர்க்கரை – சிறிதளவு

(பேரிச்சையில் உள்ள இனிப்பே போதும் என்றால், இதை சேர்க்கத்தேவையில்லை. இன்னும் கூடுதல் சுவை வேண்டுமென்றால் இதை சேர்த்துக்கொள்ளலாம்)

உப்பு – சிட்டிகை

ஏலக்காய் – 2

செய்முறை

ஒரு கடாயில் நெய் சேர்த்து வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள், முந்திரி, பாதாம் என அனைத்தையும் நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.

அதே கடாயில் கூடுதலாக நெய் சேர்த்து தேங்காயை நன்றாக சிவக்க வறுக்கவேண்டும். நீங்கள் இந்த லட்டுவை அதிகளவில் செய்கிறீர்கள், நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், தேங்காயை நன்றாக சுருள வறுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் ஆற வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு காய்ந்த மிக்ஸி ஜாரில் வறுத்த கடலை, பொட்டுக்கடலை, முந்திரி, பாதாம் எள், தேங்காய் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்த வறுக்காத பொருட்களை சேர்க்கவேண்டும். அதாவது பேரிட்சை பழம், ஏலக்காய், நாட்டுச்சர்க்கரை, உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

அதை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி நெய் சேர்த்து லட்டுகளாக பிடித்துக்கொள்ளவேண்டும். தினமும் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் இந்த லட்டை 2 கொடுத்தால் போதும். சூப்பர் சுவையில் லட்டு தயார். இதை குழந்தைகள் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டால் அவர்களின் உடலில் ஆரோக்கியம் பெருகும்.

அவர்களின் மூளை சுறுசுறுப்பாகும். ஞாபக சக்தி அதிகரிக்கும். அவர்களின் உடலில் ரத்தம் ஊறுவதும் அதிகரிக்கும். இது எவ்வித கலப்படமும் இல்லாமல் வீட்டிலே தயாரிக்கப்படும் லட்டு. சுவையும் அட்டகாசமாக இருக்கும் என்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்புவர். ஒருமுறை இதை செய்து சாப்பிட்டால் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.