Marumagal Serial: 'ஊரான் வீட்டு நெய்யே’ - முட்டி மோதும் மணிமேகலை.. ஆதிரை காலில் பிரபு - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: பிரபு அவளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில், அவளது வீட்டிற்கு வந்து அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய மருமகள் எபிசோடில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம் -
Marumagal Serial: மருமகள் சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில், தில்லை பிரபுவிடம் கடைசி நேரத்தில் நீ இப்படி எல்லாம் பேசலாமா என்று கேட்க அவனோ கல்யாணம் நடக்குமா? நடக்காதா? என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சென்றான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தார் தில்லை.
இன்னொரு பக்கம், அப்பா விஷயத்தில் மீண்டும் தவறு செய்த பிரபுவை ஆதிரை கண்டித்து பேசாமல் இருந்தாள். இதையடுத்து பிரபு அவளிடம் மன்னிப்பு கேட்கும் வகையில், அவளது வீட்டிற்கு வந்து, அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய மருமகள் எபிசோடில் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய எபிசோடில், மணிமேகலை வேல்விழியிடம் ஏன் இப்படி எல்லாம் செய்து பிரபுவின் கல்யாணத்தை நிறுத்த பார்க்கிறாய் என்று கேட்டதோடு, அவளை அடிக்கவும் பாய்ந்தாள். அப்போது உள்ளே வந்த ஏகாம்பரம், எதற்காக தற்போது இப்படி கத்திக் கொண்டிருக்கிறாய் என்று கேட்க, உங்களுக்கு இது நியாயமாக இருக்கிறதா?
நீங்கள் முன் நின்று நடத்த வேண்டிய ஒரு கல்யாணத்தை, நீங்களே தடுக்க முயற்சிக்கலாமா?.. இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாம் முழுவதுமாக மனம் மாறி, பிரபுவின் கல்யாணத்தை முன் நின்று நடத்தி வைக்கலாம் என்று சொல்ல, ஏகாம்பரம் அது ஒரு காலமும் நடக்காது. நான் அவனது கல்யாணம் முன்னின்று நடத்தி வைக்க மாட்டேன் என்றார்.
அம்மன் பார்த்துக்கொள்வாள்
அவனது கல்யாணத்தை நடக்க விடவும் மாட்டேன் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார். இந்த நிலையில் கோபமான மணிமேகலை, பிரபுவின் நிச்சயத்தை நிறுத்துவதற்காக நீங்கள் போட்ட திட்டத்தை, அந்த அம்மன் சாட்சியாக இருந்து தவிடு பொடியாக்கியது போல, நீங்கள் என்னதான் திட்டம் போட்டாலும் இந்த கல்யாணமும், அந்த அம்மனின் ஆசியோடு நல்லபடியாக நடந்தே தீரும் என்று கூறினாள்.
இதைக் கேட்ட ஏகாம்பரத்தின் அக்கா, இவள் இந்த வீட்டில் இருந்தால், இங்கு நடக்கும் திட்டத்தை எல்லாம் அங்கு சொல்லி இந்த கல்யாணத்தை நடத்தி விடுவாள். ஆகையால், இவளை அந்த வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்ல, வேல் விழியும் அதற்கு வழி மொழிந்தாள். இதையடுத்து இன்னும் கோபமான மணிமேகலை, இந்த வீட்டிலிருந்து உன்னால் மட்டும் அல்ல, உங்களுடைய அக்காவாலும் என்னை அனுப்ப முடியாது என்று சொல்லிச் சென்றாள்.
வெட்டி செலவு
மற்றொரு பக்கம், பத்திரிக்கை செலவு அதிகமானதை எண்ணி பிரபு வருத்தப்பட்டு கொண்டிருந்த நிலையில், அப்போது ஆதிரை அவனுக்கு போன் செய்தாள். அவளிடம் பிரபு பத்திரிக்கை நன்றாக இருக்கிறது. ஆனால் என்னுடைய அப்பா தான் பத்திரிகைக்கெல்லாம் இப்படி வெட்டி செலவு செய்ய வேண்டுமா என்று கேட்டதாக சொல்ல, அதை கண்டிப்பாக தில்லை மாமா சொல்லி இருக்க மாட்டார்.
நீங்கள் தான் சொல்லி இருப்பீர்கள் என்பதை சரியாக கண்டுபிடித்து விட்டாள் ஆதிரை. இதையடுத்து என்னிடம் இனி நீங்கள் பேச வேண்டாம் என்று ஆதிரை போனை வைத்துவிட, பிரபு வழக்கம் போல சாமியிடம் சென்று நின்றான். சாமியோ நீ செய்தது மிகவும் தவறு.இதுவரை நீ கஞ்சனாக இருந்து விட்டாய். ஆனால் இந்த கல்யாண விஷயத்திலாவது நீ அதனை கைவிட வேண்டும் என்று சொல்ல, அத்தோடு நேற்றைய எபிசோடு முடிவடைந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்