தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Nuts And Seeds Balls : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை! ஊட்டச்சத்து அனைத்தும் கிடைக்கும்!

Nuts and Seeds Balls : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை! ஊட்டச்சத்து அனைத்தும் கிடைக்கும்!

Priyadarshini R HT Tamil
May 22, 2024 05:33 AM IST

Nuts and Seeds Balls : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை கொடுத்தால் போதும். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.

Nuts and Seeds Balls : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை! ஊட்டச்சத்து அனைத்தும் கிடைக்கும்!
Nuts and Seeds Balls : சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை! ஊட்டச்சத்து அனைத்தும் கிடைக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உங்கள் வீட்டில் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா? எனில் அவர்களுக்கு இந்த உருண்டை மட்டும் செய்துவைத்துக்கொண்டு தினமும் கொடுத்தால் போதும். அவர்கள் விரும்பி சாப்பிடுவதுடன், அவர்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இந்த ஒரே உருண்டையில் கிடைத்துவிடும்.

தேவையான பொருட்கள்

பாதாம் – ஒரு கப்

முந்திரி – ஒரு கப்

பிஸ்தா – ஒரு கப்

வால்நட் – ஒரு கப்

பரங்கிக்காய் விதை – ஒரு கப்

சூரியகாந்தி விதை – ஒரு கப்

தர்ப்பூசணி விதை – ஒரு கப்

கடலை – அரை கப்

ஃப்ளாக்ஸ் விதைகள் – ஒரு கப்

வெள்ளை எள் – அரை கப்

ஏலக்காய் – 2 (தோல் நீக்கி விதைகளை மட்டும் சேர்த்துக்கொள்ளவேண்டும்)

நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லம் – ஒரு கப்

நெய் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி, அதில் பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட் என அனைத்தையும் சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதே கடாயில் பரங்கி விதைகள், தர்ப்பூசணி விதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் என அனைத்தையும் சேர்த்து நன்றான வறுத்து ஏற்கனவே வறுத்து வைத்துள்ளதில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் ஃப்ளாக்ஸ் விதைகளை சேர்த்து பொரிந்து வந்தவுடன் அதில் வெள்ளை எள் சேர்த்து வறுக்கவேண்டும்.

பின்னர் வறுத்த வேர்க்கடலையையும் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து அனைத்தையும் ஆறவைக்கவேண்டும்.

ஏலக்காயில் தோலை நீக்கிவிட்டு விதைகளை மட்டும் சேர்த்து சூட்டுடன் நன்றாக கலந்து ஆறவைக்க வேண்டும். அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து பாகுபதம் வரும் வரை நன்றாக காய்ச்சிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள ட்ரை ஃப்ரூட்ஸ் பொடியில் கொஞ்சம் கொஞ்சமாக பாகு சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்துகொள்ளவேண்டும். பின்னர் அதில் நெய்யும் கலந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

உருண்டை பிடிக்க வரவில்லையென்றால் ஒரு ட்ரேயில் நெய் தடவி இந்த கலவையை அதில் பரப்பி, சதுரத்துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

இந்த உருண்டையை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் கொடுத்தால்போதும். அவர்களுக்கு தேவையான போஷாக்கு இதிலே கிடைத்துவிடும்.

இந்த ஒரு உருண்டையில் ஒரு நாளுக்கு தேவையான மெக்னீசியம், வைட்டமின்கள், இரும்புச்சத்துக்கள், புரதச்சத்துக்கள், நல்ல கொழுப்பு என் அனைத்தும் உள்ளது.

எனவே உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் இதை செய்துகொடுங்கள். இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்கள் மற்றும் வயோதிகர்களுக்கு மிகவும் சிறந்தது.

இதில் உங்களுக்கு பிடித்த வேறு நட்ஸ்கள் மற்றும் விதைகளை சேர்த்துக்கொள்ளலாம். இதை குறிப்பாக நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்து வரும்போது அவர்களுக்கு நோய்கள் ஏதும் வராமல் அவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.

WhatsApp channel

டாபிக்ஸ்