பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள்..இவற்றில் எடை இழப்புக்கு எது சிறந்தது? எதில் நன்மை அதிகம் - முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள்..இவற்றில் எடை இழப்புக்கு எது சிறந்தது? எதில் நன்மை அதிகம் - முழு விவரம்

பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள்..இவற்றில் எடை இழப்புக்கு எது சிறந்தது? எதில் நன்மை அதிகம் - முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 20, 2024 08:56 PM IST

உடல் எடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்கள் பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள் என இரண்டையும் டயட்டில் சேர்ப்பதுண்டு. இதில் எது சிறந்தது என்பது பலருக்கும் பொதுவாக தோன்றும் கேள்வியாக இருக்கிறது. இவற்றில் எதில் நன்மை அதிகம், என்னென்ன தீமைகள் என்பதை பார்க்கலாம்

பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள்..இவற்றில் எடை இழப்புக்கு எது சிறந்தது? எதில் நன்மை அதிகம் - முழு விவரம்
பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள்..இவற்றில் எடை இழப்புக்கு எது சிறந்தது? எதில் நன்மை அதிகம் - முழு விவரம்

பழங்களை சாப்பிட முடியாதவர்கள், பிடிக்காதவர்கள் ஜூஸ்கள் எடை இழப்புக்கான டயட்களில் சேர்ப்பதுண்டு. ஆனால் பழங்கள், பழ ஜூஸ்கள் ஆகியவற்றில் எவை திறம்பட எடை இழக்க உதவகிறது என்பதில் உறுதியான தகவலை கூற முடியாது.

பழங்கள் மற்றும் பழ ஜூஸ்கள் ஆகிய இரண்டிலும் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை இடம்பிடித்துள்ளன. எடை இழப்பில் அவற்றின் தாக்கம் கணிசமாக வேறுபடலாம். உங்கள் உடற்பயிற்சி பயணத்தில் பழங்கள் மற்றும் பழ ஜூஸ் பற்றி விவாதிப்பதில் நீங்கள் சிக்கிக்கொண்டால், உங்களுக்கு எது சிறந்தது என்பதைத் தீர்மானிக்க உதவும் அனைத்து நன்மை தீமைகள் பற்றி பார்க்கலாம்

பழம் vs ஜூஸ்: எடை இழப்புக்கு பழங்கள் எவ்வாறு உதவுகிறது?

பழங்கள் அவற்றின் தனித்துவமான நன்மைகள் காரணமாக உங்கள் எடை இழப்பு உணவில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பழங்களில் இருக்கும் எந்தெந்த அம்சங்கள் எடை இழப்புக்கு வழிவகுக்கின்றன என்பதை பார்க்கலாம்.

அதிக நார்ச்சத்து, குறைந்த கலோரி

உணவுகளில் நார்ச்சத்து இருப்பது, வயிறு நிரம்பிய திருப்தியை ஏற்படுத்துகிறது. அத்துடன் செரிமானத்தை மெதுவாக்கி, இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இது அதிகப்படியான உணவு சாப்பிடுவதை தடுக்கவும் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கூடுதலாக, கலோரிகளில் குறைவாக இருப்பதால், சிறந்த சிற்றுண்டிதேர்வாக அமைவதுடன் எடை இழப்புக்கான உணவாக பரிந்துரைக்கப்படுகிறது

அதிக நீர் உள்ளடக்கம்

பல பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. இது உடலை நீரேற்றமாக வைத்திருப்பதில் பங்களிக்கிறது. அத்துடன் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் உடலில் நீர் இழப்பு ஏற்படுவது சில சமயங்களில் பசி என தவறாக உணரப்படலாம்

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்

பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன. இவை அனைத்தும் உடல் ஆரோக்கியத்துக்கு அவசியமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் வளர்சிதை மாற்றம் உட்பட பல உடல் செயல்பாடுகளை ஆதரிக்கின்றன. மிக முக்கியமாக எடை இழப்புக்கு உதவுகிறது.

பழ ஜூஸ்கள் என்றால் என்ன?

ஜூஸ்கள் என்பது பழங்களிலிருந்து பொதுவாக பெறப்படும் சாறு அல்லது பிளெண்ட் செய்வதன் மூலம் பெறப்படும் திரவ சாறுகள். அவை பெரும்பாலும் புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் பழங்களை உணவில் சேர்க்க எளிதான முறையாகவும் செயல்படுகின்றன.

பழங்களை போல், பழ ஜூஸ்களிலும் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் பழங்களிலும் முழுமையாக காணப்படும் உணவு நார்ச்சத்து மற்றும் பிற முக்கிய கூறுகள் இடம்பெறாமல் இருக்கிறது.

நார்ச்சத்து பழங்கள், நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக இருப்பதால், உடலில் சர்க்கரைகள் மெதுவாக வெளியேற்றும். எனவே வயிறு நிரம்பிய திருப்தியை தந்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஜூஸ்கள், மாறாக, குறைந்த நார்ச்சத்து அல்லது நார்ச்சத்து இல்லாத தன்மை, சர்க்கரை அளவை விரைவாக வெளியேற்றுகிறது. இதனால் அடிக்கடி பசி உணர்வு ஏற்படுவதுடண்டு

கூடுதல் சர்க்கரைகள்

பழங்களில் பிரக்டோஸ் போன்ற இயற்கை சர்க்கரைகள் உள்ளன. அவை உடலால் சிறப்பாக செரிக்கப்படுகின்றன. ஆனால் ஜூஸ்களில் கூடுதல் இனிப்புகள் மற்றும் சேர்மானங்கள் சேர்க்கப்படலாம். அவை எடை இழப்புக்கு நல்ல தேர்வாக இல்லாமல், எடை அதிகரிப்பை கூட செய்யலாம்

ஜூஸ்கள் அளவு

பழங்களில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பழங்களை குறைந்த அளவில் சாப்பிட்டாலே அதிக திருப்தி ஏற்படக்கூடும். அதேசமயம் ஒரு பழத்தை சாப்பிட்ட திருப்தியைப் பெறுவதற்கு, அதிக அளவு ஜூஸ்கள் பருகும் நிலை ஏற்படலாம்.

இரத்த சர்க்கரை அளவில் மாறுபாடு

ஜூஸ்களில் நார்ச்சத்து இல்லாமல் சர்க்கரைகள் மட்டும் இருப்பதால், குளுக்கோஸ் அளவுகளில் அதிக ஸ்பைக்கை உருவாக்குகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும், எடை இழப்பையும் பாதிக்கலாம்.

எடை இழப்புக்குஜூஸ்களை மனதளவில் அனுபவிக்க, உங்கள் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தவும், சர்க்கரைகள் சேர்க்கப்படாத 100 சதவீத ஜூஸ்களைத் தேர்வு செய்யலாம். மேலும் ஓட்ஸ் அல்லது முழு தானிய டோஸ்ட் போன்ற நார்ச்சத்துள்ள உணவுடன் இணைக்கலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.