வளர்சிதை மாற்றம் என்றால் என்ன? உடலில் அதை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Feb 24, 2024

Hindustan Times
Tamil

வளர்சிதை மாற்றம் என்பது நீங்கள் ஓய்வில் இருக்கும்போது உடல் எரிக்கும் கலோரிகளைக் குறிக்கிறது. உங்கள் அடிப்படை வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது

வளர்சிதை மாற்றமானது நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை எரிபொருளாக மாற்றுவது. இதன் மூலம் சுவாசம், உடல் இயக்கம், செரிமானம், இரத்த ஓட்டம், செல்லுலார் பழுது போன்ற அத்தியாவசிய உடல் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது

வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கான சில எளிய வழிமுறைகளை பார்க்கலாம்

அதிக அளவில் புரதம் எடுத்துக்கொள்வதன் மூலம் கொழுப்பு இழப்புடன் தொடர்புடைய வளர்சிதை மாற்றத்தின் சரிவை தணிக்கிறது. ஏனெனில் உணவு கட்டுப்பாட்டின் பொதுவான விளைவாக தசையை பாதுகாப்பதில் புரதம் உதவுகிறது

அதிக தீவிரம் கொண்ட  பயிற்சி அதன் தீவிரமான செயல்பாட்டின் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றமானது அதிகரிக்கும். இது தொடர்ந்து கலோரிகளை எரிக்கவும், ஓய்வில் இருந்தாலும் தசைகளை வளர்க்கவும் வழிவகுக்கும்

தசைகளை வளர்த்தெடுப்பதன் மூலம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இதனால் ஓய்வில் கூட கலோரிகளை எரிக்க அனுமதிக்கிறது

நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். எனவே அவ்வப்போது எழுந்து நிற்பதும், நடப்பதுமாக கலோரிக்களை எரிப்பதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கலாம்

க்ரீன் டீ பருகுவதால் குடலில் இருக்கும் நுண்ணுயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில்லுள்ள கொழுப்புகளை கரைய உதவுகிறது 

பப்பாளிப்பழத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்