Neem Flower Sharbat : வேப்பம்பூவில் இப்படி ஒரு பானம் செய்து பருகுங்கள்; எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Neem Flower Sharbat : வேப்பம்பூவில் இப்படி ஒரு பானம் செய்து பருகுங்கள்; எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!

Neem Flower Sharbat : வேப்பம்பூவில் இப்படி ஒரு பானம் செய்து பருகுங்கள்; எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 20, 2024 07:33 AM IST

Neem Flower Shrabat : கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூவில் சர்பத் செய்து பருகுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Neem Flower Sharbat : வேப்பம்பூவில் இப்படி ஒரு பானம் செய்து பருகுங்கள்; எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!
Neem Flower Sharbat : வேப்பம்பூவில் இப்படி ஒரு பானம் செய்து பருகுங்கள்; எத்தனை நன்மைகள் என்று பாருங்கள்!

சித்திரை மாதத்தில் எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இதில் பல வகை உணவுகள் செய்ய முடியும். சட்னி, ரசம், கிரேவி என வெயிலுக்கு இதமான பல்வேறு உணவுகளும் செய்யலாம். உங்களுக்கு இந்த வெயிலை சமாளிப்பதற்கு வேப்பம்பூ ரசம் மிகவும் உதவியாக இருக்கும்.

இந்த வேப்பம்பூவைப் பயன்படுத்தி சர்பத் பருகுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். எனவே உங்கள் குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக இதை அனைவரும் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

வேப்பம்பூக்கள், இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டவை. அது உங்கள் உடலை ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்யும். இந்தப்பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலுங்கும். இதை உட்கொள்வதும் பாதுகாப்பானது.

இது கிடைக்காத காலங்களில் இதை பொடியாக மற்றும் உலர்த்தி பயன்படுத்தப்படுகிறது. இதை பறித்தவுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வேப்பம் பூக்கள் ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் கிடைக்கும் ஒன்று. உங்கள் உணவில் இதை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வேப்பம்பூ சர்பத் செய்ய தேவையான பொருட்கள்

வேப்பம் பூக்கள் – 2 ஸ்பூன்

வெல்லம் – 2 ஸ்பூன் (பொடித்தது)

தண்ணீர் – 2 கப்

மிளகுத்தூள் – 2 சிட்டிகை

இஞ்சி – ஒரு ஸ்பூன் இடித்தது

உப்பு – தேவையான அளவு

மாங்காய் – கொஞ்சம் துருவியது

செய்முறை

தண்ணீரில் வெல்லத்தை கரைத்து, அதில் வேப்பம்பூக்களை சேர்க்க வேண்டும். உப்பு, மிளகுத்தூள், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து பருகினால் அது உங்களுக்கு சிறந்த கோடை பானமாக இருக்கும்.

வேப்பம்பூவின் நன்மைகள்

வேம்பின் நற்குணங்கள் அனைத்தும் நமக்கு நன்றாக தெரிந்தவைதான். வேப்பம்பூக்களும் அதே அளவு நன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை கொடுக்கிறது.

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்று வலி போன்ற வயிறு உபாதைகளை போக்குகிறது. இது பித்தம் உருவாவதை குறைக்கிறது. சளியை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடலில் உருவாகும் புழுக்களை அழிக்கிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேப்பம்பூக்கள் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் செய்கிறது.

வேப்பம்பூக்களின் நன்மைகள் உடலுக்கு உறுதியளிப்பதுடன் நிற்கவில்லை. முகப்பருக்களை நீக்குகிறது. கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.