தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  How To Eat Cucumber: ‘வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடக்கூடாது!’ எச்சரிக்கும் மருத்துவர்கள்! இத பாலோ பண்ணுங்க!

How to eat cucumber: ‘வெள்ளரிக்காயை இப்படி சாப்பிடக்கூடாது!’ எச்சரிக்கும் மருத்துவர்கள்! இத பாலோ பண்ணுங்க!

Apr 15, 2024 01:16 PM IST Kathiravan V
Apr 15, 2024 01:16 PM , IST

  • ”100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. 3 முதல் 3.5 கிராம் வரையிலான மாவு சத்தும். 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை நார்ச்சத்தும், வைட்டமின் கே 16 மில்லி கிராமும், வைட்டமின் சி 3 மில்லி கிராமும் உள்ளது. மேலும் 60 முதல் 70 சதவீதம் நீர்ச்சத்துக்கள் உள்ளது”

வெள்ளரிக்காயின் தொடக்கம் இந்தியாதான் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இமாலய பகுதிகளில் முதல் முதலாக தோன்றிய வெள்ளரிக்காய் பிற்காலங்களில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

(1 / 7)

100 கிராம் வெள்ளரிக்காயில் வெறும் 15 கலோரிகள் மட்டுமே உள்ளது. 3 முதல் 3.5 கிராம் வரையிலான மாவு சத்தும். 0.5 கிராம் முதல் 1 கிராம் வரை நார்ச்சத்துக்கள் உள்ளன. 

(2 / 7)

வைட்டமின் கே 16 மில்லி கிராமும், வைட்டமின் சி 3 மில்லி கிராமும் உள்ளது. மேலும் 60 முதல் 70 சதவீதம் நீர்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளதால் கோடை காலத்தில் வெள்ளரிக்காய் எடுத்து கொள்வதன் மூலம் சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைவாக கிடைக்கும்.

(3 / 7)

வெள்ளரிக்காய் சாப்பிடும்போது நிறைய பேர் செய்யும் தவறு என்ன வென்றால், பலரும் நாட்டு வெள்ளரிக்காயை தவிர்த்துவிட்டு, ஹைப்பிரிட் வெள்ளரிக்காயை சாப்பிடுகின்றனர். இதில் கசப்புத்தன்மை உள்ளதாலும், தோல் கெட்டியாக உள்ளதாலும் தோலை சீவிய பின்னர் சாப்பிடுகின்றனர்.

(4 / 7)

தோலை சீவுவதால் பெரும்பாலான வைட்டமின் சத்துக்கள் தோலோடு போய்விடுகின்றது. இதனால் வைட்டமின் கே மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் கிடைக்காது.

(5 / 7)

வெள்ளரிக்காயில் உள்ள குக்குர்பிட் ஆசின் என்ற சத்து உடலில் உள்ள உள்காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது.  எனவே வெள்ளரிக்காயை தோலோடு சாப்பிடும் போதுதான் முழு பலன்களை அடைய முடியும்.

(6 / 7)

ஈரப்பதம் மற்றும் குளிர்ச்சியான பண்புகளை கொண்டு உள்ளதல் வெள்ளரிக்காய்களை சருமத்தில் தடவுவது எரிச்சலை தணிக்கவும், வீக்கத்தை குறைக்கவும், சருமத்தை ஈரப்பதமாக்கவும் உதவுகிறது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்