Benefits of Jowar : தினம் ஒரு தானியம்! ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த சோளத்தின் நன்மைகள்!
Benefits of Jowar : சோளத்தில் உள்ள அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கிறது. அதன் சில நன்மைகளை இங்கு பார்க்கலாம்.

குளூட்டன் இல்லை
குளூட்டன் என்பது கோதுமை மற்றும் பார்லியில் உள்ள புரதச்சத்து. இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். இதனால் வயிறு உப்புசம், வலி மற்றும் பொருமல் ஆகியவை ஏற்படுகிறது. சோளம் குளூட்டன் இல்லாத முழுதானியம். குளூட்டன் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக உள்ளது.
நார்ச்சத்துகள் நிறைந்தது
பார்லி அல்லது அரிசியைவிட சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒருமுறை இதை எடுத்துக்கொண்டால், இதில் 12 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது தினம் எடுக்கவேண்டிய நார்ச்சத்தில் பாதியளவு ஆகும். அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்வதால், உடல் பருமன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் செரிமான கோளாறுகள் ஆகியவை ஏற்படுவது குறைகிறது.
ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
சோளத்தில் நிறைய மாவுச்சத்தும் உள்ளது. அதனால் இது செரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு காக்கப்படுகிறது. அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. எடை குறைக்க வேண்டும் என்பவர்களுக்கு நல்ல தேர்வாகும்.