தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Muttaikose Poriyal Recipe: ம்ம்ம்ம்.. இப்பவே நாக்குல எச்சி ஊறுதே.. கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?

Muttaikose Poriyal Recipe: ம்ம்ம்ம்.. இப்பவே நாக்குல எச்சி ஊறுதே.. கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?

Kalyani Pandiyan S HT Tamil
Aug 03, 2023 11:30 AM IST

கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?
முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

முதலில் கடாயை நன்றாக சூடாக்கிக்கொண்டு, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெய் நன்றாக சூடான பின்னர், அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கொஞ்சம் கருவேப்பிலை மற்றும் பொடியாக கட் செய்த இரண்டு பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டுக் கொள்ளுங்கள். 

பின்னர் ஒரு அரை டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்த்து விட்டு நன்றாக வதக்குங்கள். உப்பை சேர்த்து வதக்குவதால் வெங்காயமானது சீக்கிரமே வதங்கி விடும். வெங்காயம் நன்றாக வதங்கியப் பின்னர், அதில் அரைமணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த இரண்டு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பை சேர்த்துக் கொள்ளுங்கள். 

அதன் பின்னர் இதனுடன் ஒரு கால் கிலோ அளவு நன்றாக நறுக்கி வைத்திருந்த முட்டைக்கோஸை போட்டு மெதுவாக வதக்குங்கள். தீயானது குறைவான அளவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். முட்டைக்கோஸானது நன்றாக வெள்ளை நிறத்தில் வரும் வரை நன்றாக வதக்குங்கள். அதே நேரத்தில் கோஸானது மிகவும் வெந்தும் விடவும் கூடாது. 

பின்னர் அதனை மூடி போட்டு மூடி ஐந்திலிருந்து எட்டு நிமிடங்கள் வரை நன்றாக வேக விடுங்கள். இப்போது நீங்கள் மூடியை திறந்து பார்த்தீர்கள் என்றால் முட்டைக்கோஸ் நன்றாக வெந்து இருக்கும். அதன் பின்னர் அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு எடுத்தால் தற்போது சூப்பரான கல்யாண வீட்டு முட்டைக்கோஸ் பொரியல் தயார்.. செய்து பாருங்கள்!

WhatsApp channel

டாபிக்ஸ்