தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mushroom Gravy : நான் வெஜ் சுவையில் மஸ்ரூம் கிரேவி – எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க!

Mushroom Gravy : நான் வெஜ் சுவையில் மஸ்ரூம் கிரேவி – எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க!

Priyadarshini R HT Tamil
Aug 07, 2023 11:00 AM IST

Mushroom Gravy : மஸ்ரூமே தண்ணீர் அதிகம் உள்ளதுதான் எனவே எப்போது மஸ்ரூம் கிரேவி, பிரியாணி எதற்கு வேண்டுமானாலும் தண்ணீர் சேர்ப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.

நான் வெஜ் சுவையில் மஸ்ரூம் கிரேவி செய்வது எப்படி?
நான் வெஜ் சுவையில் மஸ்ரூம் கிரேவி செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

நான் வெஜ் சுவையில் மஸ்ரூம் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்

மஸ்ரூம் – ஒரு கப் (நறுக்கியது)

சின்ன வெங்காயம் – இரண்டு கைப்பிடி (ஒரு கைப்பிடி பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 1 இன்ச்

பூண்டு – 4 பல்

பட்டை – 2

கிராம்பு – 4

சோம்பு – கால் ஸ்பூன்

கசகசா – கால் ஸ்பூன்

தக்காளி – 1

வர மிளகாய் – 1

வர கொத்த மல்லி – அரை ஸ்பூன்

தேங்காய் – அரை கப்

உப்பு – தேவையான அளவு

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை, மல்லி – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்காத சின்ன வெங்காயம் இரண்டு கைப்பிடியளவு எடுத்து சேர்க்க வேண்டும். அதனுடன் இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா, வரமிளகாய், கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இந்த கலவை நன்றாக வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இந்தக்கலவை நன்றாக ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிவைத்து மஸ்ரூம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்த விழுதுகளை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும்.

மஸ்ரூமே தண்ணீர் அதிகம் உள்ளதுதான் எனவே எப்போது மஸ்ரூம் கிரேவி, பிரியாணி எதற்கு வேண்டுமானாலும் தண்ணீர் சேர்ப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வருவதுதான் பதம். நன்றாக கொதி வந்தவுடன், கொத்தமல்லித்தழை தூவி இறக்கிவிடவேண்டும்.

இந்த மஸ்ரூம் கிரேவி நான்வெஜ் சுவையிலேயே இருக்கும்.

இதை இட்லி, ஊத்தப்பம், தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.

WhatsApp channel

டாபிக்ஸ்