Mudakathan Keerai Soup : முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி? மூச்சு முட்டவைக்கும் மூட்டுவலிக்கு நிவாரணம்!
Mudakathan Keerai Soup : இந்தக்கீரையை பயன்படுத்தி தோசை, துவையல், ரசம், சூப் என அனைத்தும் செய்யலாம். இத்தனை ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் முடக்கத்தானை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.
இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை – அரை கப்
மிளகு – கால் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
பூண்டு – ஒரு பல்
நெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
மிளகு, சீரகம் மற்றும் பூண்டு ஆகிய அனைத்தையும் உரலில் போட்டு நைத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸியிலும் அரைத்துக்கொள்ளலாம்.
இரும்பு கடாயை சூடாக்கி, அதில் நெய்யை சேர்த்து சூடாக்கவேண்டும். பின்னர் அடுப்பை குறைவான தீயில் வைத்து, இடித்தவற்றை சேர்த்து வதக்கவேண்டும்.
இதில் கழுவிய முடக்கத்தான் கீரையை சேர்க்க வேண்டும். கீரை வதங்கும் வரை வதக்கவேண்டும். பின்னர் 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பை குறைவான தீயில் வைத்துக்கொள்ள வேண்டும்.
கீரை வெந்தவுடன், தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை அணைத்துவிடவேண்டும். அதை அப்படியே பருகலாம் அல்லது அனைத்தையும் நன்றாக மசித்து வடிகட்டி பருகலாம்.
இந்த சூப் குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலைக் குறைக்கும். வயிற்றுக்கு இதமளிக்கும் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை தரும்.
முடக்கத்தான் கீரையின் நன்மைகள்
முடக்கத்தான் கீரை வீக்கத்து எதிரான குணங்கள் கொண்டது.
இது மூட்டுவலி, மூட்டுவீக்கம் மற்றும் ருமட்டாய்ட் ஆர்த்ரட்டிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வாகும்.
கால்களில் ஏற்படும் இறுக்கம் மற்றும் வாதநோய் ஆகியவற்றுக்கு இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
சளி, நரம்பு கோளாறுகள், இடுப்பு வலி நோய் ஆகியவற்றுக்கு சிறப்பாக சிகிச்சையளிக்கிறது.
ஆர்த்ரிட்டிஸ், மூட்டு வலி மற்றும் கீல்வாத நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அளவு நிவாரணம் கொடுக்கிறது.
இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கு சிறப்பான சிகிச்சையளிக்கிறது.
காது வலி, சளி மற்றும் இருமலைப் போக்குவதற்கும் முடக்கத்தான் கீரை பயன்படுத்தப்படுகிறது.
இதில் உள்ள சிறப்பான வாயுத்தன்மை, மிதமான மலமிளக்கியாக செயல்படுகிறது.
முடக்கத்தான் கீரை இலை அல்லது பொடியை கொதிக்க வைத்து பருகினால், அது வயிற்றுவலி மற்றும் மலச்சிக்கலுக்கு மருந்தாகிறது.
மாதவிடாய் வலிகளை போக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
முடக்கத்தான் கீரை உடலில் சோர்வைப் போக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
முடக்கத்தான் கீரை சரும வியாதிகளுக்கு தீர்வாகிறது. தலையில் உள்ள பொடுகைப் போக்குகிறது. தலையின் அரிப்பை குணப்படுத்துகிறது. இதை அரைத்து தலைமுடியின் கால்களில் தடவினால் கூந்தலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கிறது.
இந்தக்கீரையை பயன்படுத்தி தோசை, துவையல், ரசம், சூப் என அனைத்தும் செய்யலாம். இத்தனை ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் முடக்கத்தானை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்