Cervical Cancer Symptoms : எச்சரிக்கை பெண்களே இந்த பிரச்னைகள் இருந்தால் கவனம்! கருப்பைவாய் புற்றுநோயாக இருக்கலாம்!-cervical cancer symptoms warning ladies if you have these problems be careful could be cervical cancer - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Cervical Cancer Symptoms : எச்சரிக்கை பெண்களே இந்த பிரச்னைகள் இருந்தால் கவனம்! கருப்பைவாய் புற்றுநோயாக இருக்கலாம்!

Cervical Cancer Symptoms : எச்சரிக்கை பெண்களே இந்த பிரச்னைகள் இருந்தால் கவனம்! கருப்பைவாய் புற்றுநோயாக இருக்கலாம்!

Priyadarshini R HT Tamil
Apr 30, 2024 11:00 AM IST

Cervical Cancer Symptoms : இதற்கு ஹெச்பிவி என்ற தடுப்பூசி போடப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Cervical Cancer Symptoms : எச்சரிக்கை பெண்களே இந்த பிரச்னைகள் இருந்தால் கவனம்! கருப்பைவாய் புற்றுநோயாக இருக்கலாம்!
Cervical Cancer Symptoms : எச்சரிக்கை பெண்களே இந்த பிரச்னைகள் இருந்தால் கவனம்! கருப்பைவாய் புற்றுநோயாக இருக்கலாம்! (net meds)

இதற்கு ஹெச்பிவி என்ற தடுப்பூசி போடப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொள்ள மேலும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள் இவைதான்

பிறப்புறுப்பில் திரவம் வெளியேறுவது

பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவம் கடும் துர்நாற்றம் வீசுவதாக இருக்கும். உங்கள் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவத்தில் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக நீங்கள் கவனிக்கவேண்டும். தொடர்ந்து மாற்றங்கள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

இடுப்பு வலி

தொடர் இடுப்பு வலி, குறிப்பாக உடலுறவின்போது வலி ஏற்பட்டால், மாதவிடாயின்போது மாறுபட்ட வலி ஆகியவை இருந்தால் உடனடியாக கவனிக்கவேண்டும். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

உடலுறவுக்குப்பின்னர் உதிரப்போக்கு

உடலுறவுக்குப்பின்னர் உதிரப்போக்கு ஏற்படுவது குறித்து கவனம் தேவை. இதுவும் கருப்பையில் ஏற்பட்ட மாற்றங்களால் நிகழ்பவை. உடனடியாக பரிசோதித்துக்கொள்வது நல்லது.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உதிரப்போக்கு

மாதவிடாய்க்கு மத்தியில் வழக்கத்திற்கு மாறான உதிரப்போக்கு ஏற்படுவதும் ஒரு எச்சரிக்கைதான் எனவே இதற்கும் மருத்துவரை அணுகுவதுதான் தீர்வாகும்.

மெனோபாஸ்க்கு முன்னால் உதிரப்போக்கு

மெனோபாஸ்க்கு முன்னால் உதிரப்போக்கு ஏற்படுவது கருப்பை வாய் புற்றுநோயின் மிக முக்கிய அறிகுறியாகும். எனவே இதுபோல் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

மாதவிடாய் சுழற்சியில் மாற்றம்

மாதவிடாயில் அதிக உதிரப்போக்கு அல்லது நீண்ட நாட்கள் மாதவிடாய் உதிரப்போக்கு ஏற்படுவது, கருப்பைவாயில் உள்ள பிரச்னைகளை காட்டும். மாதவிடாயில் எந்த மாற்றம் ஏற்பட்டாலும் கட்டாயம் மருத்துவ அறிவுரை தேவை.

உடல் சோர்வு மற்றும் உடல் இழப்பு

தொடர்ந்து ஏற்படும் உடல் சோர்வு மற்றும் விளக்க முடியாத எடையிழப்பும் தீவிர கருப்பைவாய் புற்றுநோயின் முக்கிய அறிகுறியாகும். இந்த அறிகுறியை தவிர்க்கக் கூடாது. இதற்கு மருத்துவ கவனம் தேவை.

சிறுநீரில் மாற்றம்

சிறுநீரில் மாற்றம், குடல் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்களும் கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள். எனவே உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

தடுப்பு முறைகள்

தடுப்பூசி எடுத்துக்கொண்டாலும். அதையும் கடந்து நீங்கள் சிலவற்றை பின்பற்றி கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படுவதை தவிர்க்கவேண்டும்.

அடிக்கடி பரிசோதனை

ஹெச்பிவி சோதனை, பேப் பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை தேவைப்படும்போது செய்ய வேண்டும். இவையனைத்தும் முன்னரே நோயை கண்டுபிடிப்பதற்கு உதவும். வழக்கமான பரிசோதனைகளுக்கு செல்லும்போது மருத்துவர்கள் எளிதாக பரிசோதனைகளை கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்கு போதிய சிகிச்சையும் அளிக்கலாம்.

உடலுறவு ஆரோக்கியத்தை பராமரிப்பது

கருப்பை ஆரோக்கியத்தை சில வாழ்வியல் முறை மாற்றங்கள் பாதிக்கின்றன. வயது, முதல் முறை உடலுறவுகொள்வது, அதிக பேருடன் உடலுறவு கொள்வது, புகைபிடித்தல் ஆகியவை கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணமாக உள்ளது. எனவே பாதுகாப்பான உடலுறவு, சிலருடன் மட்டும் உடலுறவு மற்றும் புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிடுவது ஆகியவை இந்தப் கருப்பைவாய் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும்.

சுகாதார பழக்கவழக்கங்கள்

தனிப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. முறையான சுகாதார பழக்கங்கள் இருந்தால், கருப்பைவாய் தொற்றுகள் ஏற்படுவது தடுக்கப்படும். எனவே உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் சரியான பரிசோதனைகள் செய்துகொள்வது மிகவும் முக்கியம்.

நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது

உடலில் பலமான நோய் எதிர்ப்பு இருப்பது பல்வேறு நோய்கள் ஏற்படாமல் விரட்டியடிக்கிறது. அதில் கருப்பைவாய் புற்றுநோயும் ஒன்று. எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரிவிகித உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதிய உறக்கம் ஆகியவை ஒட்டுமொத்த உடல் நலன் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் சிறந்து விளங்க உதவுகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.