தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mudakathan Keerai Dosai : மூட்டு வலியையே முடக்கிப்போடும் முடக்கத்தான் கீரை தோசை – ஈசியா இப்படி செஞ்சு பாருங்க!

Mudakathan Keerai Dosai : மூட்டு வலியையே முடக்கிப்போடும் முடக்கத்தான் கீரை தோசை – ஈசியா இப்படி செஞ்சு பாருங்க!

Priyadarshini R HT Tamil
Aug 13, 2023 10:45 AM IST

Mudakathan Keerai Dosia : முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமாக உள்ளது. முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து, சொறி, சிரங்குகளில் தடவ அவை மறையும். மலச்சிக்கலால் மூல வியாதி வந்தவர்கள் தினமும் பச்சையாக சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

முடக்கத்தான் கீரை தோசை ஈசியா செய்வது எப்படி?
முடக்கத்தான் கீரை தோசை ஈசியா செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் உள்ளன. இதை உணவில் சேர்த்துக்கொள்ள மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாக உதவும்.

முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமாக உள்ளது. முடக்கத்தான் கீரையை நன்றாக அரைத்து, சொறி, சிரங்குகளில் தடவ அவை மறையும். மலச்சிக்கலால் மூல வியாதி வந்தவர்கள் தினமும் பச்சையாக சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

காது வலி பிரச்னைகளுக்கு முடக்கத்தான் கீரை சாறை காதில் விட்டால், காது வலி நீங்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் கீரை உள்ளது. இந்த முடக்கத்தான் கீரையை அரைத்து குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, உடலில் வாதத்தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலி தீரும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நினைத்து எல்லா மூட்டு பகுதிகளிலும் தேய்த்து வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் பெறலாம். ஜலதோஷத்தால வர்ற தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நன்றாக கசக்கி, வெந்நீர்ல போட்டு ஆவி பிடிச்சா தலைவலி சரியாகும். பொடுகுத் தொல்லை நீங்க முடக்கத்தான் இலைகள் சேர்த்து செஞ்ச எண்ணெய்யை தலைக்கு தடவி வர பொடுகு தொல்லை நீங்கும்.

தேவையான பொருட்கள்

இட்லி/தோசை மாவு – 2 கப்

முடக்கத்தான் கீரை – 2 கப் (நன்றாக அலசி சுத்தம் செய்தது)

பச்சை மிளகாய் – 3-4

சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை

முடக்கத்தான் கீரையை நன்றாக அலசி உலர்த்த வேண்டும்.

ஒரு மிக்ஸி ஜாரில் முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.

இதை இட்லி மாவுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி, ஒரு கரண்டி மாவை ஊற்றி, தோசையாக வார்த்து, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்க வேண்டும்.

முடக்கத்தான் தோசை சாப்பிட தயாராகிவிட்டது. இதற்கு பொடி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என எதை வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்