தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Mosquito Remedy : வீட்டில் கொசுத்தொல்லையால் அவதியா? இந்த எளிய முறையே தீர்வு கொடுக்கும்?

Mosquito Remedy : வீட்டில் கொசுத்தொல்லையால் அவதியா? இந்த எளிய முறையே தீர்வு கொடுக்கும்?

Priyadarshini R HT Tamil
Nov 06, 2023 11:52 AM IST

Mosquito Remedy : மழைக்காலத்தில் வியாதிகளை பரப்பும் கொசுக்களை விரட்டுவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

Mosquito Remedy : வீட்டில் கொசுத்தொல்லையால் அவதியா? இந்த எளிய முறையே தீர்வு கொடுக்குமா?
Mosquito Remedy : வீட்டில் கொசுத்தொல்லையால் அவதியா? இந்த எளிய முறையே தீர்வு கொடுக்குமா?

ட்ரெண்டிங் செய்திகள்

அவை இந்த வேதிப்பொருட்களை சாப்பிட்டு வளரக்கூடிய எதிர்ப்புத்திறன் பெற்றுவிட்டதாக அறிவியல் ஆராய்ச்சிகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன. எனவே கொசுக்களை கட்டுப்படுத்துவது எப்படி என்பது பெரும் சவாலகவே உள்ளது.

கொசுக்களில் தொற்றுகளை பரப்பக்கூடிய கொசுக்கள், நான் சென்ஸ் கொசுக்கள் என்று இரண்டு வகை உண்டு. இந்த நான்சென்ஸ் கொசுக்களை அவை நம்மை கடித்து துன்புறுத்துமேயொழிய நமக்கு நோய்களை பரப்பாது. எனவே அவற்றால் பிரச்னைகள் இல்லை. என்றாலும், இந்த தொற்று ஏற்படுத்தும் கொசுக்கள் டெங்கு, மலேரியா, டைபாஃய்டு போன்ற பல்வேறு வைரஸ் தொற்றுகளை ஏற்படுத்தி, நம்மை உயிரிழப்பு வரை கொண்டு சென்று விடுகிறது.

இதனால்தான் நாம் கொசுக்களை அழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவற்றிற்காக நாம் செய்யும் அனைத்தும் வீணாகி, கொசுக்கள் மாலையானால் நமது வீட்டில் சுற்றிக்கொண்டு, நம்மை கடித்துக்கொண்டு, வியாதிகளை பரப்பிக்கொண்டுதான் இருக்கின்றன.

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்டும் ஒரு எளிய வழிமுறைதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்றி உங்கள் வீட்டில் உள்ள கொசுக்களை விரட்டுங்கள். தினமும் மாலை 5 முதல் 6 மணிக்குள் இதை செய்தால், பொதுவாகவே இரவில் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து தாக்கும் கொசுக்கள் உங்கள் வீட்டிற்கு வராது. உங்களை தொல்லை செய்யாது.

தேவையான பொருட்கள்

மண் சட்டி சிறியது

வேம்பு இலைகள் – 2 கைப்பிடி (அரைப்பதம் காய்ந்தது)

பிரியாணி இலைகள் – 2

கற்பூரம் – 5 கட்டிகள்

கிராம்பு – 8

கடுகு எண்ணெய் – கால் கப்

செய்முறை

ஒரு மண் சட்டியில் அரைப்பதம் காய்ந்த வேம்பு இலைகளை சேர்த்துவிட்டு, அதனுடன், பிரியாணி இலைகள், கற்பூரம், கிராம்பு, கடுகு எண்ணெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து, அதில் உள்ள சூடத்தை ஏற்றினால், இவையனைத்தும் எரிந்து வீட்டுக்குள் ஒரு நறுமணம் பரவும். மேலும் அது வீட்டில் உள்ள கொசுக்களையும் பறந்து ஓடச்செய்யும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்