Lemon Side Effects: எந்த பிரச்சனை உள்ளவர்கள் எலுமிச்சை ஜூஸ் குடிக்க கூடாது தெரியுமா.. சிறுநீரக கல் முதல் ஒவ்வாமை வரை
Lemon Side Effects: எலுமிச்சை செரிமானம் மற்றும் எடை குறைப்புக்கு உதவினாலும், சிலர் தவறுதலாக கூட எலுமிச்சை சாப்பிடக்கூடாது என்பதை தெரிவித்து கொள்ளுங்கள். இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறும்.

Lemon Side Effects: மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் பழமாக எலுமிச்சை உள்ளது. உடலை நீர்ச்சத்துடன் வைத்துகொள்ள எலுமிச்சை ஜூஸ் அதிகம் பயன்படுகிறது.
வைட்டமின் சி, கால்சியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாக எலுமிச்சை உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தி, இதய நோய் பிரச்னை,சிறுநீரக கற்கள் மற்றும் தோலின் அமைப்பை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றது
எலுமிச்சை என்பது நச்சுத்தன்மையிலிருந்து செரிமானம் மற்றும் எடை இழப்பு வரை அனைத்திற்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பழமாகும். காரணம், அதன் சத்துக்கள், எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி போன்ற கூறுகள் உள்ளன. மிகவும் நன்மை பயக்கும். ஆனால் சிலருக்கு எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் பக்க விளைவுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், யாரெல்லாம் தவறுதலாக கூட எலுமிச்சை குடிக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வது அவசியம், இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக மாறும்.